Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

5 மணி நேரத்தில் இத்தன லட்சம் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையா? அப்படி என்ன ஸ்பெஷல்.. | Realme C55 SmartPhone

Nandhinipriya Ganeshan Updated:
5 மணி நேரத்தில் இத்தன லட்சம் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையா? அப்படி என்ன ஸ்பெஷல்.. | Realme C55 SmartPhoneRepresentative Image.

இந்தியாவில் மிகவும் நம்பகமான தொழில்நுட்ப பிராண்டான ரியல்மீ, கடந்த வாரம் தான் அதன் C - சீரிஸில் Realme C55 ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியது. மேலும், இந்த ஸ்மார்ட்ஃபோன் மார்ச் 28 முதல் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, Realme C55 இன் முதல் விற்பனை மார்ச் 28 ஆம் தேதி மதியம் 12:00 மணி முதல் தொடங்கப்பட்டது. விற்பனை தொடங்கிய சுமார் 5 மணி நேரத்திலேயே 100,000 ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனை செய்து ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் புதிய சாதனையை படைத்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல், C55 மாடலுக்கு 66,000 முன்கூட்டிய ஆர்டர்கள் (Pre-orders) கிடைத்துள்ளதாகவும் ரியல்மீ நிறுவனம் கூறியிருக்கிறது. இது Realme C சிரீஸ் ஸ்மார்ட்போன்களில் ஒரு சாதனத்திற்கு இதுவரை இல்லாத அதிகபட்ச டிமாண்ட் ஆகவும் கருதப்படுகிறது. 

5 மணி நேரத்தில் இத்தன லட்சம் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையா? அப்படி என்ன ஸ்பெஷல்.. | Realme C55 SmartPhoneRepresentative Image

Realme C55 சிறப்பம்சங்கள்:

இந்த ஸ்மார்ட்ஃபோனானது MediaTek Helio G88 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இதனால், பயனர் தடையற்ற அனுபவத்தை பெற முடியும். மேலும், 64MP முதன்மை கேமராவுடன் வரும் Realme C55, C-சீரிஸில் OV64B ஃபிளாக்ஷிப் சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். டைனமிக் இமேஜ் ஸ்னாப்ஷாட், ஸ்ட்ரீட் ஃபில்டர் மற்றும் 90ஸ் பாப் ஃபில்டர் என பிரத்யேக ஸ்ட்ரீட் போட்டோகிராபி பயன்பாடுகளை கொண்டுள்ளது. 

Realme C55 அதிவேகமான 33W SUPERVOOC சார்ஜிங் தீர்வை வழங்குகிறது. அந்தவகையில், வெறும் 29 நிமிடங்களில் 50% சார்ஜ் ஆகி 63 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். சார்ஜிங் பற்றிய கவலையே வேண்டாம்.

இந்த ஸ்மார்ட்ஃபோன் 17.07cm (6.72”) 90Hz FHD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது C-சீரிஸில் இவ்வளவு கம்மி பட்ஜெட்டில் கிடைக்கும் முதல் ஃபோன். இந்த Realme C55ல் 8GB வரை ரேம் (RAM) ணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 8GB மற்றும் 128GB உள் சேமிப்பகத்தை (Internal Storage) எக்ஸ்டன்ஸன் செய்து கொள்ளலாம். 

5 மணி நேரத்தில் இத்தன லட்சம் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையா? அப்படி என்ன ஸ்பெஷல்.. | Realme C55 SmartPhoneRepresentative Image

விலை:

ICICI கிரெடிட் கார்டுகள், EMI மற்றும் realme.com ஆகியவற்றில் வாங்குபவர்களுக்கு 4GB+64GB வகைக்கு 500 ரூபாயும், 8GB + 128GB வகைக்கு 1000 ரூபாயும் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. அதேபோல், Flipkartஇல் HDFC கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் மற்றும் EMI ஆகியவற்றில் வாங்குபவர்களுக்கும் சலுகைகளைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 4GB+64GB மாடல் ரூ.10,499 க்கும், 8GB + 128GB மாடல் ரூ.12,999 க்கும் கிடைக்கிறது. நிறுவனத்தின் இந்த தள்ளுபடிகள் தான் அதிகப்படியான விற்பனைக்கு ஒரு காரணமாகவும் இருக்கிறது.

இதையும் படிங்க | றெக்க மட்டும் இருந்த தேவதைங்க.. த்ரிஷாவின் அழகிய புகைப்படங்கள்..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்