Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

200எம்பி கேமரா...512ஜிபி ஸ்டோரேஜ்...இதுக்கு மேல என்ன வேணும் | Honor 90 Specifications in tamil

Priyanka Hochumin Updated:
200எம்பி கேமரா...512ஜிபி ஸ்டோரேஜ்...இதுக்கு மேல என்ன வேணும் | Honor 90 Specifications in tamilRepresentative Image.

ஹானர் நிறுவனத்தின் புதிய ஹானர் 90 ஸ்மார்ட்போன் வரும் சில நாட்களில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பே அமேசான் தளத்தில் ஹானர் 90 ஸ்மார்ட்போனுக்கு என்று தனி வலைத்தள பக்கத்தை உருவாகியுள்ளது. ஒன்பிளஸ் மாடலைப் போலவே ஹானர் 90 ஸ்மார்ட்போன் வளைந்த டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த போனின் விலை, அம்சம் மற்றும் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஹானர் 90 ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டு அறிமுகமாகிறது. இத்துடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் என பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் அமைப்புடன் வருகிறது. மேலும் MagicOS 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

200எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவை அடங்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் அளிக்கப்பட்டுள்ளது. செல்பீ பயன்பாட்டிற்கு 50எம்பி கேமரா முன்பக்க டிஸ்பிளேவில் பொருத்தப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட இரண்டு வேரியண்ட்டில் ஹானர் 90 ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 5000mAh பேட்டரி கொண்டு வருகிறது. 5ஜி, 4ஜி, புளூடூத் 5.2, வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரூ.35,000/-க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்