Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒன்பிளஸ் மாடலின் அடுத்த ரிலீஸ்...Oneplus Ace 3 வேற லெவல் அம்சங்களுடன் | Oneplus Ace 3 Launch Date in India

Priyanka Hochumin Updated:
ஒன்பிளஸ் மாடலின் அடுத்த ரிலீஸ்...Oneplus Ace 3 வேற லெவல் அம்சங்களுடன் | Oneplus Ace 3 Launch Date in IndiaRepresentative Image.

ஒன்பிளஸ் பிரியர்களுக்கு சூப்பர் நியூஸ் காத்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒன்பிளஸ் 11R என்னும் மாடல் மறுபெயரிடப்பட்டு ஒன்பிளஸ் ஏஸ் 2 என்று உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதே போல், தற்போது ஒன்பிளஸ் 12R என்னும் மாடலை மறுபெயரிடப்பட்டு ஒன்பிளஸ் ஏஸ் 3 ஆக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் போனின் சில முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Oneplus Ace 3 ஃபோன் ஆனது, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74-இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், PWM டிம்மிங் சப்போர்ட் மற்றும் பஞ்ச் ஹோல் ஆகியவையுடன் வருகிறது. Qualcomm Snapdragon 8 Gen 2 SoC சிப்செட் மூலம் இயக்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் 16GB/24GB LPDDR5x ரேம் மற்றும் 512GB/1TB வரை UFS 4.0 ஸ்டோரேஜ் அமைப்பை கொண்டு வரலாம். இந்த மாடல் ட்ரிபிள் ரியர் செட்டப்பாக 50MP Sony IMX890 சென்சார், 8எம்பி அல்ட்ராவைடு ஓம்னிவிஷன் OV8D10 லென்ஸ் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 32MP Sony IMX709 டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆகியவை இருக்கலாம்.

அதே போல், முன் கேமரா 16MP செல்ஃபி ஸ்னாப்பராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 5,500mAh பேட்டரி கொண்டு வரலாம். கூடுதலாக, இன்-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் ரீடர், ஆண்ட்ராய்டு 14 சாப்ட்வேர், 5ஜி, வைஃபை ஏசி, புளூடூத் 5.2, USB-C மற்றும் NFC சப்போர்ட் ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷங்களைப் பெறலாம். அறிமுகம் தேதி பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை, இருப்பினும் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்