Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

How to: பிறந்த குழந்தைக்கு ஆதார் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

Priyanka Hochumin November 11, 2022 & 14:00 [IST]
How to: பிறந்த குழந்தைக்கு ஆதார் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?  Representative Image.

இந்திய மக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது தான் ஆதார். இப்பொது பிறந்த குழந்தையில் இருந்து இறக்கப் போகும் முதியவர்கள் வரை ஆதார் கார்டு இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படி இப்ப பிறந்த குழந்தைகளுக்கு வெறும் ரெண்டே ரெண்டு ஆவணங்களை வைத்து ஈஸியாக Baal Aadhar கார்டு விண்ணப்பித்து வாங்கிக்கலாம். சரி இப்ப அதை எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.

தேவையான ஆவணங்கள்

பிறந்த குழந்தைக்கு ஆதார் கார்டு வாங்க இந்த ரெண்டு ஆவணங்கள் மட்டும் இருந்தால் போதும்.

குழந்தையின் பிறப்பு சான்றிதழ்

குழந்தையின் பெற்றோர்களின் ஆதார் கார்டு.

விண்ணப்பிக்கும் முறை

UIDAI-ன் அதிகாரபூர்வ வலைதள பக்கமான https://uidai.gov.in/ என்ற பக்கத்துக்குச் செல்லவும்.

அதில் ஆதார் அட்டை பதிவு பக்கத்தை (Aadhar card registration) கிளிக் செய்யவும்.

அங்கு கேட்கப்பட்ட படிவங்களில் குழந்தையின் பெயர், பெற்றோரின் தனிப்பட்ட தகவல்கள், போன் நம்பர் மற்றும் இமெயில் ஐடி உள்ளிட்ட தகவல்களை உள்ளிடவும்.

அடுத்து, நீங்கள் இருக்கும் இருப்பிடத்துக்கான தகவல்களை உள்ளிடவும்.

உங்களுடைய இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் உங்களுக்கான appointment-ஐ தேர்வு செய்து கொள்ளவும்.

அவ்ளோ தான் அடுத்து கொஞ்ச நாளிலையே உங்க வீட்டுக்கு குழந்தையோட ஆதார் கார்டு வந்துடும். இனிமேல் அதை பயன்படுத்தி குழந்தைக்கு ஏதேனும் தடுப்பு மருந்து அல்லது மற்ற இடங்களில் தாராளமாக பயன்படுத்தலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்