Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யூடியூபில் பணம் சம்பாதிக்க இனி 1000 சப்ஸ்கிரைபர்களுக்காக வெயிட் பண்ண தேவையில்ல.. வெளியான புது ரூல்ஸ்.. | Youtube Monetization Rules 2023 Tamil

Nandhinipriya Ganeshan Updated:
யூடியூபில் பணம் சம்பாதிக்க இனி 1000 சப்ஸ்கிரைபர்களுக்காக வெயிட் பண்ண தேவையில்ல.. வெளியான புது ரூல்ஸ்.. | Youtube Monetization Rules 2023 TamilRepresentative Image.

ஒரு காலத்தில் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட யூடியூப் ஆப், தற்போது உலகம் முழுவதும் பணம் சம்பாதிக்கும் ஒரு ஆப்பாக உருவெடுத்துள்ளது. இதில் வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் குறிப்பிட்ட அளவு சம்பாதிக்க முடியும். அதனால், பெரும்பாலானோர் வீட்டில் இருந்தபடியே சம்பாதிப்பதற்காக கையில் எடுக்கும் முதல் ஆயுதம் யூடியூப் சேனல் தொடங்குவது. காரணம் திறமை மட்டுமே போதும், முதலீடு தேவையில்லை. அந்தவகையில், இந்த கொரோனா லாக்டவுன் வந்ததில் இருந்து யூடியூப் சேனல் ஆரம்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்கிறது. ஒவ்வொரு யூடியூபர்களும் தங்களுடைய திறமையை மட்டுமே வைத்து, மாதம் பல லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டிவருகிறார்கள். அதுவும், பெரும்பாலானோர் யூடியூப் சேனலில் வீடியோ பதிவிடுவதையே பிரதான வேலையாகவும் வைத்துள்ளனர். 

இருப்பினும், பணம் சம்பாதிக்க வீடியோவை மட்டுமே பதிவிட்டால் போதாது. அந்த வீடியோ தரமானதாகவும், மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும் வகையிலும் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் உங்க சேனல் அதிகப்படியான சப்ஸ்கிரைபர்களையும் கொண்டிருக்க வேண்டும். அதோடு, உங்க வீடியோக்களை லட்சக்கணக்கான மக்கள் பார்த்திருக்க வேண்டும். அப்போது தான், உங்க சேனலை மானிடைசேஷன் செய்ய முடியும். மானிடைசேஷன் செய்தால் மட்டுமே மாதம் மாதம் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால், இந்த ரூல்ஸ் சிறிய படைப்பாளிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதை குறைக்கும் நோக்கத்தில் தற்போது யூடியூப் நிறுவனம் மானிடைசேஷன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. 

பழைய ரூல்ஸ்:

உங்க சேனலை மானிடைஸ் செய்வதற்கு குறைந்தபட்சம் 1000 சப்ஸ்கிரைபர்களை கொண்டிருக்க வேண்டும். மேலும், ஒரு ஆண்டில், நீங்கள் பதிவிடும் வீடியோக்களை 4,000 மணி நேரம் பார்வையாளர்கள் பார்த்திருக்க வேண்டும் அல்லது 90 நாட்களுக்கு யூடியூப் ஷார்ட்ஸ்களின் வியூஸ் 10 மில்லியனை எட்டியிருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை அடையும் பட்சத்தில் உங்கள் யூடியூப் சேனலை உங்களால் மானிடைஸ் செய்ய முடியும். தற்போது, இந்த அளவீடுகள் அதிரடியாக குறைக்கப்பட்டு புதிய யூடியூப் மானிடைசேஷன் ரூல்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளன.

புது ரூல்ஸ்:

இந்த புதிய யூடியூப் மானிடைசேஷன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகளின்படி, தற்போது உங்க சேனல் வெறும் 500 சப்ஸ்கிரைபர்களை கொண்டிருந்தாலே போதும். மேலும், 90 நாட்களில் 3 வீடியோக்களை பதிவிட்டிருக்க வேண்டும். இந்த வீடியோக்களை 3000 மணி நேரம் பார்வையாளர்கள் பார்த்திருக்க வேண்டும். அல்லது யூடியூப் ஷார்ட்ஸ்களின் வியூஸ் 3 மில்லியனை எட்டியிருக்க வேண்டும். இந்த அளவீடுகள் இருந்தாலே உங்க சேனலை மானிடைசேஷன் செய்து கொள்ள முடியும்.

ஹாப்பியோ ஹாப்பி:

இந்த புதிய நிபந்தனைகள் மூலமாக தற்போது சிறிய படைப்பாளர்களும் வெகு விரைவில் யூடியூப்பில் சம்பாதிக்கலாம். இந்த விதிகள் முதலில் அமெரிக்கா, தைவான், கனடா, தென்கொரியாவில் அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த சில வாரங்களில் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்