Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

போடு தகிட தகிட...FIFA World Cup Quatar 2022...எப்படி ஃபிரீயா பாக்கலாம் தெரியுமா?

Priyanka Hochumin November 11, 2022 & 11:30 [IST]
போடு தகிட தகிட...FIFA World Cup Quatar 2022...எப்படி ஃபிரீயா பாக்கலாம் தெரியுமா?Representative Image.

புட்பால் வெறியர்களுக்கு ஒரு நல்ல செய்தி! அதாவது நம்ப ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் இந்தியாவில் இதுவரை யாரும் செய்யாத ஒரு செயலை செய்து வாடிக்கையாளர்களை மகிழ்வித்துள்ளனர். அது என்னென்னா? இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் FIFA World Cup Quatar 2022 நிகழ்வை இலவசமாக லைவ் பார்க்கும் வாய்ப்பை ஜியோ இப்போது உருவாக்கியுள்ளது.

போடு தகிட தகிட...FIFA World Cup Quatar 2022...எப்படி ஃபிரீயா பாக்கலாம் தெரியுமா?Representative Image

நாம் மட்டும் இல்ல இந்த உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் FIFA World Cup Quatar 2022 புட்பால் போட்டி வரும் நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18, 2022 வரை நடைபெறுகிறது. தினமும் விறுவிறுப்பான மேட்ச்களை எப்படி காண்பது போன்ற நிறைய கேள்விகளுக்கான பதில் இந்த பதிவில் இருப்பதால் முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். Viacom18 sports என்னும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்குச் சொந்தமான நியூ ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தான் இந்த FIFA World Cup Quatar 2022 நிகழ்வை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. எனவே, "Isse Bada Kuch Nahi" என்ற பிரச்சாரத்தின் பெயரில் இது இந்தியாவில் அறிமுகமாகிவருகிறது.

போடு தகிட தகிட...FIFA World Cup Quatar 2022...எப்படி ஃபிரீயா பாக்கலாம் தெரியுமா?Representative Image

இதன் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவர்க்கும் FIFA World Cup Quatar 2022 நேரலை காணலாம். மேலும் JioCinema இப்போது அனைத்து தொலைத்தொடர்பு சந்தாதாரர்களும் இந்த FIFA World Cup Quatar லைவ் செய்யப் போகிறது. இதுல இன்னொரு குட் நியூஸ் என்ன தெரியுமா? JioCinema இப்போது iOS மற்றும் Android போன்களுக்கு டவுன்லோட் செய்யலாம். இது உங்கள்ள எத்தனை பேத்துக்கு தெரியும்னு தெரியல. வரும் நவம்பர் 20 ஆம் தேதி முதல் தொடங்கும் FIFA World Cup Quatar 2022 நீங்கள் பார்க்க விரும்பினால் Sports18 - 1 SD & HD சேனல்களுக்குப் பணம் செலுத்திப் பார்க்கலாம். இல்லை என்றால், JioCinema சந்தாதாரராக இருந்தால் பணம் எதுவும் செலுத்தாமல் ஃபிரீயா லைவ்ல பார்க்கலாம்.

FIFA World Cup Quatar 2022 போட்டியைப் பார்ப்பதற்குச் சந்தா கட்டணம் எதுவும் இல்லை என்பது தான் இதுல ஹை லைட்டே. இலவசமாக 64 புட்பால் மேட்ச் பார்க்கும் அனுபவத்தை 4K தரத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்யும் முதல் இந்திய நிறுவனம் நம்ப ஜியோ தாங்க.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்