Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Apply Community Certificate Online in Tamil Nadu: வெறும் 5 நிமிடத்தில் உட்காந்த இடத்தில் சாதி சான்றிதழ் வாங்குவது எப்படி?

Priyanka Hochumin July 11, 2022 & 09:15 [IST]
How to Apply Community Certificate Online in Tamil Nadu: வெறும் 5 நிமிடத்தில் உட்காந்த இடத்தில் சாதி சான்றிதழ் வாங்குவது எப்படி?Representative Image.

How to Apply Community Certificate Online in Tamil Nadu: நாம் குழந்தைகளாக இருக்கும் போதும் நமக்கு குழந்தை பிறகும் போதும் எடுக்கப்படும் முக்கிய ஆவணங்களுள் ஒன்று ஜாதி சான்றிதழ். என்ன தான் ஜாதி மதம் இருக்கக்கூடாது என்று நாம் நினைத்தாலும் நம்முடைய குழந்தைகள் படிக்க செல்லும் இடத்தில் சாதி சான்றிதழ் ஒரு அத்யாவசியமாக இருக்கிறது. இதனை நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வாங்க முடியும். இதற்காக ஒரு நாள் முழுவதும் அரசு அலுவலகத்தில் என்று காத்துக்கொண்டிருக்க தேவையில்லை.

Step 1

நீங்கள் ஆன்லைனில் சாதி சான்றிதழ் வாங்க முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற அரசாங்கத்தில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2

அங்கு பயனாளர் உள்நுழைவு என்பதை கிளிக் செய்தவுடன் இன்னொரு பக்கம் தோன்றும். அதில் Username மற்றும் Password என்பதை உள்ளிட்டவும். ஒரு வேளை நீங்கள் புதிதாக பயன்படுத்தினால் Sign Up என்பதை கிளிக் செய்து உங்களின் முழு விவரத்தை உள்ளிட்டு தொடரவும்.

Step 3

அடுத்து Department Services இல் Revenue Department என்பதை கிளிக் செய்யவும். அவற்றின் கீழ் என்னென்ன Services இருக்கிறது என்னும் பட்டியல் காட்டப்படும். அதில் Community Certificate (சாதி சான்றிதழ்) என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Step 4

இப்பொழுது புது விண்டோ ஒன்று ஓபன் ஆகும். அதில் நீங்கள் இந்த சாதி சான்றிதழ் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் மற்றும் இதற்கான கட்டணம் எவ்ளோ போன்ற அனைத்து விவரங்களும் தெளிவாக கூறப்பட்டிருக்கும். அதை தெளிவாக பார்த்துவிட்டு Proceed என்பதை கிளிக் செய்யவும்.

Step 5

அடுத்து Can நம்பரைப் பதிவு செய்ய வேண்டும். உங்களிடம் இல்லை என்றால் Can Number Register என்பதை கிளிக் செய்து பதிவு செய்யுங்கள். இல்லை உங்களிடம் இருந்தால் Can நம்பரை டைப் செய்து Proceed என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

Step 6

இப்போது சாதி சான்றிதழ் விண்ணப்ப படிவம் ஒன்று ஓபன் ஆகும். அதில் நம்முடைய விவரங்கள் தெளிவாக காட்டப்படும், பிறகு தாய் மற்றும் தந்தையின் சாதியை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்ததாக விண்ணப்பதாரரின் தந்தை மற்றும் தாய் இதற்கு முன்னர் ஆன்லைனில் சாதி சான்றிதழ் விண்ணப்பித்து பெற்றுள்ளனரா என்று கேட்கப்பட்டிருக்கும். அதற்கு ஆம் என்றால் Yes, இல்லை என்றால் No என்பதை செலக்ட் செய்து Submit-ஐ அழுத்தவும்.

Step 7

இறுதியாக Document Attached என்னும் விண்டோ ஓபன் ஆகும். அதில் விண்ணப்பதாரரின் போட்டோ, Address Proof, Self-Declaration Form மற்றும் பெற்றோர்கள் தாய் அல்லது தந்தையின் Community Certificate-ஐ அப்லோட் செய்யவேண்டும். ஒரு முக்கிய குறிப்பு என்னவென்றால், நீங்கள் அப்லோட் செய்யப்படும் ஆவணங்கள் எந்த format இல் இருக்க வேண்டும் கூறப்பட்டிருக்கும். அதன் படி அப்லோட் செய்த்தாய்வும், இல்லை என்றால் அவற்றை பதிவேற்றம் செய்ய முடியாது.

Step 8

இதற்கு நீங்கள் அரசாங்கத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கான தொகை எவ்ளோ என்று காட்டப்படும், பிறகு நீங்கள் ஆன்லைன் மூலம் பணத்தை பரிவர்த்தனை செய்யுங்கள். நீங்கள் பணம் கட்டிய பிறகு ஒரு ஒப்புகை சீட்டு தரப்படும். அதில் ஒரு விண்ணப்ப எண் கொடுக்கப்பட்டிருக்கும், அதனை பயன்படுத்தி அதே இணையதளத்தில் உங்களின் Status எந்த நிலையில் இருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். அப்படி பார்க்கும் பொழுது உங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் Application Approved என்று காட்டப்படும். பிறகு நீங்கள் உங்களின் சாதி சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம். 

இப்பொழுது ஒரு சில சமயங்களில் நமது பெற்றோருக்கு சாதி சான்றிதழ் இல்லாமல் இருக்கலாம். அந்த மாறி சமயத்தில் அவர்களின் பிள்ளைகளுக்கு எவ்வாறு சாதி சான்றிதழ் எடுப்பது என்று கேட்டால்? ஒரு பிரச்னையும் இல்லை. பெற்றோர்களின் சாதி சான்றிதழ் இல்லாத பட்சத்தில் அவரின் பெற்றோர் அல்லது உறவினர்கள் சான்றிதழை பயன்படுத்தி நமக்கான சாதி சான்றிதழ் வாங்க முடியும்.  

How to Apply Community Certificate Online in Tamil Nadu, how to apply community certificate for child online, how to apply community certificate online for child in tamilnadu, How to Apply Community Certificate Online in tamil, How to Apply Community Certificate Online in tamilnadu in tamil, how to apply community certificate online in Coimbatore, how to apply community certificate online in Chennai, how to apply community certificate without parents certificate, how to apply community certificate in mobile

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்