Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Apply Passport Online in Tamil: அங்க இங்கன்னு அலையாம பாஸ்போர்ட் எப்படி வாங்கணும்? இதைப்பாருங்க!

Priyanka Hochumin July 10, 2022 & 13:30 [IST]
How to Apply Passport Online in Tamil: அங்க இங்கன்னு அலையாம பாஸ்போர்ட் எப்படி வாங்கணும்? இதைப்பாருங்க!Representative Image.

How to Apply Passport Online in Tamil: நமக்கு பாஸ்போர்ட் என்பது ஒரு முக்கியமான ஆவணம். இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பாஸ்போர்ட் மிகவும் அவசியமான ஒன்று. சரி நாம பாஸ்போர்ட் எடுத்து என்ன பண்ண போறோம்னு ஒரு சிலர் நினைக்கலாம். அப்படியானவர்களுக்கு ஒரு குறிப்பு, நம் வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்காத விஷயங்கள் தான் நடைபெறும். அதே போல் திடிரென்று நீங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம். அதனால் அதற்காக முன்பே தயாராகி விடுங்கள்.

முன்பெல்லாம் அரசு சார்ந்த ஆவணங்கள் ஏதேனும் வாங்க வேண்டும் என்றால், இடையில் இருக்கும் புரோக்கரைத் தாண்டி பொய் வாங்க முடியாது. அதற்கு எவ்ளோ கொடுக்க வேண்டும் என்று உங்கள் எல்லாத்துக்கும் தெரியும். ஆனால் இப்பொழுது அந்த கவலை இல்லை, உட்காந்த இடத்தில் இருந்தே சில நொடிகளில் நம்மால் பாஸ்போர்ட் வாங்க முடியும் அதற்கான வழிமுறைகள்.

இங்க போய் ரெஜிஸ்டர் பண்ணுங்க

  • நீங்கள் பாஸ்போர்ட் சேவா கேந்திரா (Passport Seva Kendra) மூலமாக எளிமையான முறையில் பாஸ்போர்ட் வாங்கலாம்.
  • அதற்கு முதலில் passportindia.gov.in/AppOnlineProject என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.
  • அங்கு "New User Registration" என்பதை கிளிக் செய்யவும். 
  • பிறகு "Register to Apply at" ர்பத்தில் Passport Office என்பதை தேர்வு செய்யவும். அதற்கு கீழ் உங்களுக்கு மிக அருகில் இருக்கும் "Passport Office"-ஐ தேர்வு செய்யவும்.
  • அதை தொடர்ந்து "Given Name, Sur Name மற்றும் Date of Birth" என்பதில் சரியான தரவை பதிவு செய்யவும்.
  • இதற்கு பிறகு DO YOU WANT YOUR LOGIN ID TO BE SAME AS EMAIL ID என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கும். அதில் Yes அல்லது No என்பதில் உங்கள் விருப்பம் என்னவோ அதை கிளிக் செய்யவும்.
  • அதற்கு கீழ் Login ID மற்றும் Password என்ற ஆப்ஷன் கேட்கப்பட்டிருக்கும். அதை சரியாக உள்ளிட்ட பிறகு, SELECT APPLICATION TYPE என்பதில் PASSPORT என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இதனை தொடர்ந்து Type of Services என்ற பகுதியில் Fresh என்பதையம், Applicant Age என்பதில் உங்களின் வயதையும் உள்ளிடவும்.
  • பின்பு Required Scheme என்பதில் Normal மற்றும் Tatkkal என்பதை கிளிக் செய்யவும். அதன் பின்னர் உங்களின் பாஸ்போர்ட் எத்தனை Pages பக்கங்களுடன் வேண்டும் என்பதை உள்ளிடுங்கள்.
  • கடைசியாக எவ்ளோ தொகையோ அதனை செலுத்தி, Appoinment Availabilty-ஐ தேர்வு செய்யுங்கள். அதாவது உங்களுக்கு அருகில் இருக்கும் பாஸ்போர்ட் அலுவலகத்தையும், தேதியும் உள்ளிட்டு சப்மிட் செய்யவும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றி ரெஜிஸ்டர் செய்த பிறகு, உங்கள் கோரிக்கை மற்றும் ஆவணங்கள் சரி பார்க்கப்படும். பின்னர் காவல் அலுவலர் உங்களை விசாரித்து நீங்கள் தந்த தரவுகள் சரியா என்பதை சோதனை செய்வார். பிறகு ஒப்புதல் கிடைத்த பின்பு பாஸ்போர்ட் உங்கள் வீட்டிற்கு வந்துவிடும். அவ்ளோ தான் சிம்பிள் இதுக்கு போய் அங்கையும் இங்கையும் அலைஞ்சிகிட்டு. இனிமே இதையே ஃபாலோ பண்ணுங்க.

How to apply passport in tirunelveli, how to apply passport in Erode, how to apply passport in madurai, how to apply passport online in tamil, how to apply passport in tamil 2022, how to apply for passport online, online passport application fees, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்