Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவின் ChatGPT முயற்சி நம்பிக்கையற்றது...OpenAI CEO சாமின் பகிர் பேச்சு | Sam Altman about India’s ChatGPT Attempt

Priyanka Hochumin Updated:
இந்தியாவின் ChatGPT முயற்சி நம்பிக்கையற்றது...OpenAI CEO சாமின் பகிர் பேச்சு | Sam Altman about India’s ChatGPT AttemptRepresentative Image.

OpenAI-ன் நிறுவனர் மற்றும் CEO சாம் ஆல்ட்மேன், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கும் இந்தியாவின் முயற்சி "நம்பிக்கையற்றது" என்று கூறினார். அதற்கு டெக் மஹிந்திரா நிறுவனத்தின் CEO CP Gurnani, சாம் ஆல்ட்மேனின் சவாலை ஏற்றுக்கொள்வதாக ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவில், தி எகனாமிக் டைம்ஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் சாம் ஆல்ட்மேன் கலந்துக் கொண்டுள்ளார். அதில் பத்திரிகையாளர் ஒருவர், இந்தியாவில் ChatGPT போன்ற AI உருவாக்குவதை எப்படி நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் "இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மிகவும் துடிப்பாக இருப்பதை நான் அறிவேன். இருப்பினும் எங்களுக்கு சவாலாக அடிப்படை மாதிரிகளைப் பயிற்றுவிப்பது முற்றிலும் நம்பிக்கையற்றது என்பதை நாங்கள் உங்களுக்கு வெளிப்படையாகக் கூறுவோம். இருப்பினும் முயற்சி செய்பவர்கள் தாராளமாக முயற்சியை மேற்கொள்ளலாம். ஆனால் வெற்றிக்கான வாய்ப்பு மிகவும் குறைவு" என்று கூறினார்.

அவரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், Tech Mahindraவின் CEO CP குர்னானி "Altman வழங்கிய 'சவாலை' ஏற்றுக்கொள்கிறேன். இந்திய நிறுவனங்கள் அதிக ஆற்றலுடன் செயல்பட்டு வருகிறது. அமெரிக்க நிறுவனங்களின் AI திறன்களை இந்திய நிறுவனங்களால் பொருத்த முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் உங்களின் இந்த சவாலை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்