Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Apply Income Certificate Online in Tamil: இப்படியும் வருமான சான்றிதழை அப்ளை செய்து வாங்கலாமா? இது தெரியாம போச்சே!

Priyanka Hochumin July 12, 2022 & 09:00 [IST]
How to Apply Income Certificate Online in Tamil: இப்படியும் வருமான சான்றிதழை அப்ளை செய்து வாங்கலாமா? இது தெரியாம போச்சே!Representative Image.

How to Apply Income Certificate Online in Tamil: நமக்கு ஆண்டு வருமானம் இவ்ளோ என்று வருவாய் துறையில் அளிக்கப்படும் சான்றிதழை தான் வருமான சான்றிதழ் என்று அழைக்கப்படுகிறது. இது எதற்கு தேவைப்படுகிறது என்றால், பள்ளி அல்லது கால்லூரியில் சேர்வதற்கும், கல்வி கடன் பெறுவதற்கும் தேவை. யாருக்கு பயனாக இருக்கும் என்றால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயன்படுகிறது. இந்த முக்கிய ஆவணத்தை ஆன்லைன் மூலம் எப்படி வாங்க வேண்டும் என்று விரிவாக தெரிந்துகொள்வோம்.

ஸ்டெப் 1

நீங்கள் அரசு சார்ந்த எந்த ஆவணத்தையும் பெற https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம். இதற்கு முதலில் இ-சேவை ஐடியை ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அது எப்படி செய்ய வேண்டும் என்றால், Citizen Login என்பதை கிளிக் செய்து Sign Up ஆப்ஷனை தேர்வு செய்யவும். இப்பொழுது ஒரு விண்டோ ஓபன் ஆகும், அதில் உங்களுடைய விவரங்கள் கேட்கப்படும். அதனை சரியாக உள்ளிட்டு இறுதியில் Captcha Code என்பதில் கொடுக்கப்பட்டுள்ளதை உள்ளிட்டு Sign Up பட்டனை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களுடைய போனுக்கு OTP வரும், அதை டைப் செய்து Enter பட்டனை அழுத்தினால் ரெஜிஸ்டர் ஆகிவிடும்.

ஸ்டெப் 2

இப்பொழுது Login செய்ய மீண்டும் Home Page-க்கு சென்று User Name, Password மற்றும் Captcha Code ஆகியவற்றை டைப் செய்து லாகின் செய்யுங்கள். அது முடிந்த பின்பு Services என்பதில் Income Certificate என்பதை கிளிக் செய்யவும்.

இப்ப ஒரு புது விண்டோ ஓபன் ஆகும், அதில் வருமான சான்றிதழ் அப்ளை செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், இதற்கான கட்டணம் ஆகிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை முழுமையாக படித்துவிட்டு Proceed என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3

இப்பொழுது CAN நம்பரை பதிவு செய்ய வேண்டும். அதில் Register CAN என்பதை கிளிக் செய்யவும். பிறகு விண்ணப்பதாரரின் விவரம் (Applicant Detail) திரையில் காட்டப்படும். அதனுள் உங்களுடைய விவரங்களை உள்ளிட்டு Submit என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

இது முடிந்த உடன் List of Documents என்ற பேஜ் ஓபன் ஆகும். அதில் விண்ணப்பதாரரின் போட்டோ, Address Proof , Family or Smart card Proof மற்றும் Self-declaration ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 4

இந்த அனைத்து செயல்முறைகளையும் முடித்த பிறகு, Make Payment என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கட்டணத்தை செலுத்தவும். இப்படியாக உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு, அடுத்த 60 நாட்களுள் உங்களுக்கு அனுப்பப்படும். 

How to Apply Income Certificate Online in Tamil, How to Apply Income Certificate Online in Tamilnadu, How to Apply Income Certificate Online in mobile, income certificate apply online Chennai, varumana certificate download, how to download income certificate online,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்