Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Get Varisu Certificate Online in Tamil: வாரிசு சான்றிதழை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி? முழு விவரங்களும் இங்கே

Gowthami Subramani July 11, 2022 & 18:00 [IST]
How to Get Varisu Certificate Online in Tamil: வாரிசு சான்றிதழை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி? முழு விவரங்களும் இங்கேRepresentative Image.

How to Get Varisu Certificate Online in Tamil: வாரிசு சான்றிதழ்களை எளிமையான முறையில் ஆன்லைனில் அப்ளை செய்து பெறலாம். வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பிக்க முறைகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

வாரிசு சான்றிதழ்

வாரிசு சான்றிதழ் என்பது எல்லோரும் அறிந்ததே. ஒரு குடும்பத்தில் உள்ள தலைவர் அல்லது உறுப்பினர்கள் இறந்து விட்டால், அவரின் சொத்துக்களையோ அல்லது பணப் பலன்களையோ, பெறுவதற்கு அந்த பகுதியின் வட்டாட்சியர் அலுவலர் மூலம் பெறப்படும் சான்றிதழே வாரிசு சான்றிதழ் எனப் போற்றப்படுகிறது. ஒருவர் இறந்த பின், அவரது சொத்துக்களை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் அவரது வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் என்பது மிகவும் அவசியம் ஆகும்.

ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் எப்படி பெறுவது?

இந்த வாரிசு சான்றிதழை ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெறலாம். ஆன்லைனில் இதனைப் பெறுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வாரிசு சான்றிதழைப் பெறும் நபர்கள் முதலில் www.tnsevai.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில், இ-சேவை ஐடி-யை பதிவு செய்ய வேண்டும்.

அதன் பின், மீண்டும் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று Sign up என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்ய வேண்டும்.

Sign up என்பதைக் க்ளிக் செய்யும் போது, அதில் ஒரு திரை தோன்றும். அதில் கொடுக்கப்பட்டுள்ளவாறு, தங்களுடைய பெயர், மாவட்டம் மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி உள்ளிட்டவற்றை நிரப்ப வேண்டும்.

மேலும், ஆதார் எண், Login ID, Password, Confirm Password மற்றும் கேப்ட்சா Code உள்ளிட்டவற்றையும் நிரப்ப வேண்டும்.

பிறகு பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விவரங்களும் சரிபார்த்த பிறகு Sign up என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு Sign up செய்த பிறகு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP எண் அனுப்பப்படும். பிறகு, அந்த OTP எண்ணை நிரப்பி Enter என்பதைக் க்ளிக் செய்தால் Registration ஆகி விடும்.

Graphical user interface, text, website

Description automatically generated

இந்தப் பதிவு செய்முறை முடிந்த பின், Login செய்ய வேண்டும். அதன் படி, மீண்டும் Home Page-க்குச் சென்று அதில் User name, Password உள்ளிட்டவற்றை நிரப்ப வேண்டும். பின், அதில் Captcha Code-ஐ நிரப்ப வேண்டும்.

பின், Login என்ற பட்டனைக் க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின், உங்களுடைய ஐடி Login ஆகி விடும்.

வாரிசு சான்றிதழ்

இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் Login செய்த பிறகு, அதில் Services என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்ய வேண்டும்.

பின், அதில் Revenue Department என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்ய வேண்டும்.

பிறகு, Revenue Department-ன் கீழ் வரும் அனைத்து சேவைகளும் காட்டப்படும். அவற்றின் இரண்டாவது பக்கத்தில் Legal Heir Certificate (வாரிசு சான்றிதழ்) என்ற ஆப்ஷன் இருக்கும்.

இந்த பகுதிக்குச் சென்று, Proceed என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்ய வேண்டும்.

இப்போது அதில் பதிவு எண்ணை நிரப்ப வேண்டும்.

பின், Legal Heir Certificate பெற விண்ணப்பிப்பதற்கு மேலே உள்ளவாறு ஒரு விண்ணப்பம் திறக்கப்படும். அதன் பிறகு, அதில் வாரிசு சான்றிதழ் பெற நினைப்பவர்கள் தங்களுடைய விவரங்களைத் தெளிவாக உள்ளிட வேண்டும்.

அதன் பின், அதில் Make Payment என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்து, கொடுக்கப்பட்டுள்ளவைப் படி தொகையைச் செலுத்தலாம்.

தொகை செலுத்திய பிறகு, குறிப்பிடப்பட்ட நாள்களில் நீங்கள் வாரிசு சான்றிதழைப் பெறலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Varisu Certificate Apply Online Tamilnadu | Varisu Certificate in Tamil | Varisu Certificate Download | Varisu Certificate Required Documents in Tamil | Varisu Certificate Status | Varisu Certificate in English | Legal Heir Certificate Tamilnadu | How to Download Legal Heir Certificate Online Tamilnadu | How to Apply Varisu Certificate in Tamilnadu Online | How to Apply Varisu Certificate in Tamilnadu | How to Apply Varisu Certificate in Tamil | How to Apply Varisu Certificate in Pondicherry | What Are the Documents Required for Varisu Certificate | How to Apply Varisu Certificate in Online | How Many Days to Get Varisu Certificate | Where to Get Varisu Certificate


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்