Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vivo V25 Pro Price in India: சும்மா அசால்டாக லான்ச் ஆகும் Vivo V25 pro...பேக் பேனல்ல கலர் மாறி மாறி விளையாடலாம்!

Priyanka Hochumin August 17, 2022 & 10:45 [IST]
Vivo V25 Pro Price in India: சும்மா அசால்டாக லான்ச் ஆகும் Vivo V25 pro...பேக் பேனல்ல கலர் மாறி மாறி விளையாடலாம்!Representative Image.

Vivo V25 Pro Price in India: இன்று இந்தியாவில் பகிரங்கமாக களமிறங்குகிறது விவோ வி 25 ப்ரோ. அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்துவதற்கு முன்பே பல ஆன்லைன் டீசர் மூலம் வரப்போகும் விவோ வி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் தகவல்களை சீன எலக்ட்ரானிக் ஜெயின்ட் வெளியிட்டது. அதனை வைத்து பார்க்கும் போது விவோ வி 25 ப்ரோ மற்றும் வெண்ணிலா வி 25 மாடல் ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகமாகலாம். இன்னும் விரிவாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

லான்ச் பற்றிய விவரங்கள்!

லேட்டஸ்ட் விவோ வி 25 ப்ரோ லான்ச் ஈவென்ட் இன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் நடைபெறுகிறது. விர்சுவளாக நடைபெறும் நிகழ்ச்சி நிறுவனத்தின் அதிகாரபூர்வ சேனலில் ஒளிபரப்பாகும். மேலும் விவோ வி 25 ப்ரோ போனின் விவரக்குறிப்புகளை மற்றும் டிசைன் ஆகியவற்றை மைக்ரோ சைட் மூலம் விவோ மற்றும் பிளிப்கார்ட் ஏற்கனவே டீஸ் செய்து கொண்டிருந்தனர். எனவே, பிளிப்கார்ட் இந்தியா வெப் சைட்டில் விருப்பம் இருப்பவர்கள் போனின் லான்ச் போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள "எனக்கு தெரியப்படுத்து" என்னும் பட்டனை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இவ்ளோ விலை கொடுத்து வாங்கணுமா?

இன்னும் அதிகாரப்போர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை என்றாலும் கிடைத்த தகவல் படி விவோ வி 25 ப்ரோ ரூ. 40,000/-க்கும் வெண்ணிலா மாடல் ரூ. 30,000/-க்கும் விற்பனை ஆகலாம். அதே போல் டிப்ஸ்டர் குக்லானி கூற்றுப்படி, விவோ வி 25 ப்ரோ இந்தியாவில் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்டில் அறிமுகமாகலாம் என்று கூறப்படுகிறது. எனவே, பேஸ் மாடலானது 8GB + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 39,999/- விலைக்கும் 12GB + 256GB மாடல் சற்று அதிகரித்து ரூ. 43,999/-க்கும் விற்பனையாகலாம் என்று தெரிவித்தனர். மேலும் அந்த அறிக்கையில் விவோ வி 25 ப்ரோ Sailing Blue மற்றும் Pure Black கலரில் வரும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

Vivo V25 Pro அம்சங்கள்

இதுவரை ஒரு சில விவரக்குறிப்புகளை தான் விவோ நிறுவனம் உறுதியாக அறிவித்தது. அது எந்த மாறியான அம்சங்கள் என்று பார்ப்போம். இந்த ஸ்மார்ட்போன் 3D வளைந்த ஷ்கிரீன் உடன் வண்ணத்தை மாற்றும் பேக் பேனலுடன் வருவதாக டீஸ் செய்யப்பட்டுள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதக் காட்சியைக் கொண்டிருக்கும் மற்றும் MediaTek Dimensity 8100 SoC மூலம் இயக்கப்படும். ஃபோனில் உள்ள இன்-பில்ட் ஸ்டோரேஜ் ரேம் 8ஜிபி வரை நீட்டிக்க முடியும். தரமான போட்டோ எடுப்பதற்காக Vivo V25 Pro ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் 64-மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை உள்ளடக்கியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 66W ஃபிளாஷ் சார்ஜின் ஆதரவுடன் 4,830mAh பேட்டரி இருக்கும்.

Vanilla V25 அம்சங்கள்

நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனைப் பற்றிய எந்த தகவலையும் அறிமுகப்படுத்தவில்லை. ஒருவேளை இன்று நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் சஸ்பென்ஸாக வெளிப்படுத்துகிறார்கள் போல. இருப்பினும் இதுவரை வெளியான வதந்திகள் படி, இந்த ஸ்மார்ட்போன் 6.62-இன்ச் முழு-HD+ AMOLED டிஸ்ப்ளேவை 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ப்ரோ மாடலின் அதே மூன்று பின்புற கேமரா அமைப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Qualcomm Snapdragon 778G SoC அல்லது MediaTek Dimensity 1200 SoC மூலம் இயக்கப்படும். Vivo V25 ஆனது 44w அல்லது 66W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை பேக் செய்ய முடியும். இவை அனைத்தும் இன்னும் உறுதி செய்யப்படாத தகவல்கள். முற்றிலும் தெரிந்துகொள்ள கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.  

Vivo V25 Pro Price in India, vivo v25 pro specifications, vivo v25 pro flipkart, vivo v25 pro launch date, vivo v25 pro 5g price in india, vivo v25 pro price in india flipkart, vivo v25 pro 5g, vivo v25 pro full specification, vivo v25 pro features.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்