Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nothing Phone 1 Launch Date in India: நத்திங் போன் 1 வாங்குறவங்களுக்கு இந்த சலுகை கட்டாயம்! எப்படி இழுக்குறாங்க பாரு கன்ஸ்யூமர்ஸை!

Priyanka Hochumin July 08, 2022 & 13:45 [IST]
Nothing Phone 1 Launch Date in India: நத்திங் போன் 1 வாங்குறவங்களுக்கு இந்த சலுகை கட்டாயம்! எப்படி இழுக்குறாங்க பாரு கன்ஸ்யூமர்ஸை!Representative Image.

Nothing Phone 1 Launch Date in India: இன்னும் 4 நாட்களுள் வெளியாகும் நத்திங் போன் 1 என்னென்ன சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு தரப்போகிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பாக்க சும்மா ஸ்டைலா இருக்கு!

டெக்னாலஜி வளர்ந்துள்ள இதனை ஆண்டுகளில் ஒரு சில டிவைஸ்கள் தான் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும். ஆந்த பட்டியலில் இந்த பிரமாண்டமான நத்திங் போன் 1 நிச்சியம் இடம்பெற்றுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் வாடிக்கையாளர்களுக்கு என்ன வேணும் என்பதை பக்காவாக பிளான் பண்ணி செக் வைக்கிறார்கள். லண்டனை முதன்மை இடமாகக் கொண்ட இந்த நத்திங் போன் 1, வரும் ஜூலை 12 ஆம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் இந்திய நேரப்படி சரியாக இரவு 8.30 மணிக்கு அந்த நிகழ்ச்சி நடைபெறும்.

எத்தனை நாட்களுள் வாங்கலாம்?

நீங்கள் நத்திங் போன் 1 இன் அறிமுக நிகழ்ச்சியை பார்க்க விரும்பினால், நத்திங் நிறுவனத்தின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் 'ரிட்டர்ன் டு இன்ஸ்டிங்க்ட் (Return to Instinct)' என்ற விர்ச்சுவல் நிகழ்வின் மூலம் பார்க்கலாம். இந்த நிகழ்வு முடிந்த பிறகு ஜூலை 12 ஆம் தேதி மணி இரவு 9 மணி முதல் ஜூலை 18 ஆம் தேதி மாலை 6 மணி வரை ப்ரீ-ஆர்டர் பாஸ் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

வாங்குறவுங்களுக்கு சலுகை கண்டிப்பா இருக்கு!

நத்திங் போன் 1 வாங்க துடிக்கும் மக்களே, நீங்கள் HDFC கிரெடிட் கார்டு மூலம் ரூ. 2000/- வரை தள்ளுபடி கிடைக்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதே போல் EMI மூலம் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஒரு கும்பல் இருப்பார்கள், அவர்களுக்கும் இந்த ரூ. 2000/- தள்ளுபடி உண்டு. மற்ற சலுகைகள் பற்றி இன்னும் 4 நாட்களில் முழுமையாக தெரிந்துகொள்ளலாம் அதுவரை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

Nothing Phone 1 இன் முக்கிய அம்சம்

இவர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்க அவ்வப்போது டீஸ் செய்து வருகின்றனர். இதுவும் ஒரு வகையான யுக்தி தான், சரி இந்த ஸ்மார்ட்போன் பற்றிய முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. TUV SUD பட்டியல் மூலம் ஆன்லைனில் வெளிவந்த தகவல் என்னவென்றால், வரப்போகும் நத்திங் போன் 1 அதிகபட்சமாக 33W முதல் 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை ஆண்ட்ராய்டு கொண்டு இயங்கும் என்பதால் அதிக மக்கள் வாங்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

இத்துடன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் முடிவுக்கு வருகிறது, இன்னும் கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள வெயிட் பண்ணுங்க.

Nothing phone 1 launch date in india, nothing phone 1 price in india, nothing phone 1 flipkart, nothing phone 1 specs, nothing phone 1 launch, nothing phone 1 review, nothing phone 1 pre order, nothing phone 1 offer flipkart, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்