Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Claim PF Amount in Tamil: உங்க PF அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்கணுமா…? இத ஃபாலோப் பண்ணுங்க… ஈஸியா எடுக்கலாம்….!

Gowthami Subramani July 20, 2022 & 13:45 [IST]
How to Claim PF Amount in Tamil: உங்க PF அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்கணுமா…? இத ஃபாலோப் பண்ணுங்க… ஈஸியா எடுக்கலாம்….!Representative Image.

How to Claim PF Amount in Tamil: PF என்பதை ஒரு சேமிப்பு முறையாகவே கருதலாம். மாத சம்பளம் பெறும் நபர்களின் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்டபகுதி அளவு பிஎஃப் தொகையாக எடுக்கப்படும். இந்த செயல்முறையை EPFO நிறுவனம் வழி நடத்துகிறது. அதன் படி, EPFO நிறுவனம் ஊழியதாரர்களின் முதலீட்டை வேறு சிலவற்றில் இன்வெஸ்ட் செய்து அதில் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை வட்டியாகத் தருவர். இவ்வாறு பெறப்படும் PF தொகையை உங்களின் PF அக்கவுண்டிலிருந்து எப்படி எடுக்கலாம் என்ற முறைகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

பணத்தேவை அதிகரிப்பு

இந்தியாவில் தற்போது பணவீக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஊழியர்கள் சுமையையும், நெருக்கடியையும் சந்தித்து வருகின்றனர். இவற்றுள் சிலர், குறிப்பாக மாதந்தோறும் PF தொகை பிடிப்பவர்கள் பிஎஃப் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பர். ஆனால், பிஎஃப் பணத்தை ஒருமுறை மட்டுமே எடுப்பதற்கு அனுமதி தந்தது.

கடன் சுமை குறைக்க

அதன் படி, கடந்த ஆண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமான EPFO, ஊழியர்களின் கடன் சுமையைக் குறைப்பதற்கு EPF பணத்தை இரண்டு முறை எடுத்துக் கொள்வதற்கு அனுமதி அளித்தது. மேலும், இதற்கான அறிவிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே வெளியானது.

EPF பணத்தை எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

PF பணத்தை எடுக்க நினைப்பவர்கள் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

முதலில் e-seva இணையதளமான https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில், UAN மற்றும் Password-ஐ பயன்படுத்தி உள்நுழைய (Login) வேண்டும்.

Login செய்த பிறகு, அதில் Online Services என்ற பகுதியில் Claim என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.

அந்த பக்கத்தில், கேட்கப்படும் விவரங்களைப் பதிவிட வேண்டும்.

பின், வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவிட வேண்டும்.

வங்கிக் கணக்கு எண் சரிபார்க்கப்பட்ட பின்பு, Proceed for Online Claim என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

பின், அதில் PF Advance (Form 31) என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.

அதில் பணம் எடுப்பதற்கு “Outbreak of Pandemic” என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு, நாம் எவ்வளவு தொகையைப் பெற நினைக்கிறோமோ அவற்றைப் பதிவிட்டு, காசோலை நகலை அப்லோடு செய்து முகவரியைப் பதிவிட வேண்டும்.

கடைசியாக, மொபைலுக்கு வரும் OTP-ஐப் பதிவிட வேண்டும்.

பிறகு, பணம் எடுப்பதற்கான கோரிக்கையை சமர்ப்பித்த பின்பு, கேட்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் வங்கிக் கணக்கிற்கு பணம் வந்து விடும்.

இந்த செயல்முறைகளைப் பயன்படுத்தி, PF அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Claim PF Amount in Tamil | How to Claim PF Amount Online in Tamil | EPFO Claim Online | PF Full Amount Claim Form | EPFO Login | EPFO Withdrawal | How to Claim PF Amount Through Online in Tamil | How to Claim PF Amount Online YouTube Tamil | How to Claim PF Full Amount Online in Tamil | How to Claim PF Pension Amount Online Tamil | How to Claim Online PF Withdrawal | How to Claim PF Amount Online Using UAN | How to Redeem My PF Amount Online | How to Claim PF Amount Online Video


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்