Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Play Chess for Beginners: காயின்களை இந்த மாதிரி மூவ் பண்ணுங்க… அப்றம் பாருங்க நீங்க தான் செஸ் வின்னர்…!

Gowthami Subramani July 20, 2022 & 09:35 [IST]
How to Play Chess for Beginners: காயின்களை இந்த மாதிரி மூவ் பண்ணுங்க… அப்றம் பாருங்க நீங்க தான் செஸ் வின்னர்…!Representative Image.

How to Play Chess for Beginners: நவீன காலத்தில், பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வீட்டுக்குள்ளே விளையாடுவதைத் தான் விரும்புகின்றனர். தற்போது பெரும்பாலானோர் ஃப்ரீ ஃபையர், பப்ஜி, லூடோ உள்ளிட்ட ஆன்லைன் கேம்கள் விளையாடுவதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதைத் தவிர, மூளையை வேகமாகச் செயல்படச் செய்யும் விளையாட்டுகளும் அதிகம் உள்ளன. அந்த வகையில், சதுரங்கம் அல்லது செஸ் விளையாட்டைக் கூறலாம். செஸ் விளையாட்டு என்பது, போர்க்களத்தில் வீரர்களுடன் ஒப்பிட்டுக் கூறும் ஒரு சிறந்த விளையாட்டு ஆகும். இதில், நாம் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

போர்க்களத்துடன் ஒப்பிடுதல்

அந்த காலத்தில் மன்னர்கள், இன்னொரு நாடுடன் போர் புரிய வேண்டுமெனில், ஏராளக்கணக்கான வீரர்களைக் கொண்டு போர் புரிவர். அவ்வாறு இருக்கும் போது, அந்த வீரர்களை சரியான முறையில் வழிநடத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஒரு நாட்டின் ராஜாவை வீழ்த்தி விட்டால், அந்த போர் முடிந்து விடும். அதே போல தான் இந்த செஸ் விளையாட்டும். ராஜாவைக் காப்பாற்ற வீரர்கள், மந்திரி, குதிரைப்படை, யானைப் படை மற்றும் ராணி முதற்கொண்டு போரில் செயல்படுவர். இவ்வாறு யார் முதலில் ராஜாவை வீழ்த்துகிறாரோ அவர்களே இந்த போட்டியில் வெற்றியாளராகக் கருதப்படுவர்.

செஸ் காயின்கள்

வீரர்கள் – 8 பேர்

யானைப்படை – 2

குதிரைப்படை – 2

மந்திரி – 2

ராஜா – 1

ராணி – 1

இதே போலவே, எதிரே விளையாடும் நபருக்கும் காயின்கள் இருக்கும்.

போரில் எவ்வாறு வீரர்கள் முன்னே சென்று படையினைத் தாக்குகின்றனரோ, அது போல இதிலும் வீரர்கள் முதலில் செல்வர். எனினும், எதிராளியை வீழ்த்துவதற்கு குதிரைப்படை, யானைப்படை, மந்திரி போன்றோர் செல்வர். மேலும், ராணியும், ராஜாவைக் காப்பாற்றுவதற்காக எதிர் உள்ள அனைவரையும் தாக்குவார்.

செஸ் விளையாட்டைப் பொறுத்த வரை, செஸ் காயின்களுக்கு ஒரு குறிப்பிட்ட விதிமுறைகள் இருக்கிறது. மேலும், செஸ் விளையாட்டுப் பலகையில் கருப்பு மற்றும் வெள்ளை கலரில் சதுர வடிவில் இருக்கும். அதே போல, காயின்களும் கருப்பு மற்றும் வெள்ளை கலரில் இருக்கும்.

விதிமுறைகள்

வீரர்கள்

முதலில் இரண்டு Steps அல்லது ஒரு Step எடுத்து வைக்கலாம். ஆனால், எதிரிகளை நேராக இருக்கும் போது, வெட்டக் கூடாது. குறுக்கே நின்றவாறு இருக்கும் எதிரியை வெட்டலாம்.

யானைப்படை

யானைப்படை நேராக மட்டுமே செல்லும். குறுக்காக செல்ல முடியாது. யானைப் படை எந்த இடத்தில் இருப்பினும், அது Straight ஆக மட்டுமே செல்ல முடியும்.

குதிரைப் படை

குதிரைப்படை L Shape-ல் மட்டுமே செல்லும். L Shape-ல் செல்லும் சமயத்தில் வீரர்களை வீழ்த்தும்.

மந்திரி

இதில் மந்திரி என்பவர், Cross ஆக மட்டுமே செல்வார். அதே போல, இதில் வெள்ளை கலரில் உள்ள காயின் வெள்ளை பெட்டிகளின் வாயிலாகவும், கருப்பு கலரில் உள்ள காயின்கள் கருப்பு பெட்டிகள் வழியாகவும் செல்லும்.

ராணி

இதில் ராணி காயின் குதிரையைத் தவிர மற்ற படைகளுக்குக் குறிப்பிட்ட எல்லா விதிமுறைகளின் படி செல்ல முடியும். அதாவது L Shape-ல் மட்டும் ராணி காயின்கள் செல்லாது.

ராஜா

ஒவ்வொரு Move ஆக தான் ராஜா நகர முடியும்.

இவ்வாறு எந்த ஒரு வீரர் முதலில் ராஜாவை சாய்க்கிறாரோ, அவரே அந்த போட்டியின் வெற்றியாளராகக் கருதப்படுவர்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்