Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டெலிட் செய்யாமல் த்ரெட்ஸ் அக்கவுண்டை டெலிட் செய்வது எப்படி? | How to Delete Threads Account in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டெலிட் செய்யாமல் த்ரெட்ஸ் அக்கவுண்டை டெலிட் செய்வது எப்படி? | How to Delete Threads Account in TamilRepresentative Image.

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் மிகவும் பிரபலமான சமூக வலைதளமாக விளங்குகிறது ட்விட்டர். இந்த ட்விட்டரை கடந்த அக்டோபர் மாதம் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் சுமார் ரூ.3.64 லட்சம் கோடி கொடுத்து வாங்கினார். இதையடுத்து ட்விட்டர் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தது. அதாவது, ட்விட்டர் பணியாளர்கள் நீக்கம், பயன்படுத்தப்படாத ட்விட்டர் கணக்குகள் நீக்கம், பிரபலங்கள் பெயரில் இருக்கும் போலி அக்கவுண்ட்கள் நீக்கம், ட்விட்டர் கணக்கு ப்ளூ டிக் பெற கட்டணம், ட்வீட்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு, இறுதியில் ட்விட்டர் லோகோ மாற்றம் என பலவிதமான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்தது.

இவையனைத்தும் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பயனர்களிடையே பெரும் குழப்பத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பல நிறுவனங்கள் களத்தில் குதித்தன. இந்த நேரத்தில் தான் ட்விட்டருக்கு போட்டியாக புதிய தளத்தை உருவாக்கும் முயற்சியில் மெட்டா நிறுவனம் இறங்கியது. அப்படி உருவாக்கப்பட்ட புதிய செயலி தான் 'த்ரெட்ஸ்'. இந்த புதிய செயலியை கடந்த ஜூலை 06 ஆம் தேதி மெட்டா நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் அறிமுகம் செய்தார். இந்த செயலி தொடங்கப்பட்ட ஒரே நாளில் 5.5 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றது.

இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டெலிட் செய்யாமல் த்ரெட்ஸ் அக்கவுண்டை டெலிட் செய்வது எப்படி? | How to Delete Threads Account in TamilRepresentative Image

ட்விட்டர் போலவே இருக்கும் இந்த செயலியிலும் கருத்துகளை எழுத்து வடிவில் பதிவிடவும், இணைப்புகளை பகிரவும், புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடவும் முடியும். இதை மற்றொருவர்கள் லைக், ஷேர், கமெண்ட் செய்ய முடியும், மேலும் பிற நபர்களின் கணக்குகளை பின்தொடரலாம். அதுமட்டுமல்லாமல், தனி நபருடன் சாட்டிங் செய்யும் வசதியும் இருக்கிறது. இந்த புதிய பிளாட்ஃபார்மை முயற்சிக்கவும், அதில் என்ன புதியதாக வழங்கப்படுகிறது என்பதைப் பார்க்கவும் பலரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலமாக த்ரெட்ஸ் -இல் இணைய தொடங்கினர்.

அதாவது, த்ரெட்ஸ் செயலியில் அக்கவுண்ட் தொடங்க வேண்டுமென்றால் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்க வேண்டும். அப்படி இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை பயன்படுத்தி த்ரெட்ஸ் செயலியில் அக்கவுண்ட் தொடங்கும்போது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை நீக்காமல் உங்கள் த்ரெட்ஸ் அக்கவுண்ட்டை நீக்க முடியாது. ஆனால், இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை நீக்காமல், த்ரெட்ஸ் அக்கவுட்ண்ட்டை செயலிழக்க செய்ய முடியும். அது எப்படி செய்வது என்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டெலிட் செய்யாமல் த்ரெட்ஸ் அக்கவுண்டை டெலிட் செய்வது எப்படி? | How to Delete Threads Account in TamilRepresentative Image

How to Delete Threads Account in Tamil?

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை டெலிட் செய்யாமல் த்ரெட்ஸ் அக்கவுண்ட்டை நீக்க, முதலில் த்ரெட்ஸ் செயலியை திறந்து கீழே வலது மூலையில் உள்ள ப்ரொஃபைல் ஐகானை (Profile Icon) க்ளிக் செய்யவும். 

பின்னர், மேல் வலது மூலையில் இருக்கும் மெனு ஐகானை (Menu Icon) க்ளிக் செய்யவும்.

அதில் அக்கவுண்ட் (Account) என்பதை க்ளிக் செய்து, ப்ரொஃபைலை செயலிழக்கச் செய்யவும்.

இறுதியாக டிஆக்டிவேட் த்ரெட்ஸ் (Deactivate threads) சுயவிவரத்தை தட்டி உங்கள் விருப்பதை உறுதிப்படுத்தவும்.

அவ்வளவு தாங்க! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்