Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்: இனி செக்யூரிட்டி டைட் தான்

Chandrasekar Updated:
வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்: இனி செக்யூரிட்டி டைட் தான்Representative Image.

வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் நம்பர்களுக்கான புதிய மாற்றத்தை முன்னெடுக்கும் வகையில், 'போன் நம்பர் ப்ரைவஸி'என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அம்சத்தின் வழியாக, ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டியின் கீழ் நடக்கும் உரையாடல்களில் நீங்கள் கலந்துகொள்ளும் போது, யார் என்றே தெரியாத மற்ற குழு மெம்பர்களிடம் இருந்து உங்களின் பெயர் மற்றும் போன் நம்பரை மறைக்க முடியும்; கூடவே அனைத்து மெசேஜ்களுக்கும் ரியாக்ட் செய்யவும் முடியும்.

இந்த அம்சம் எப்படி வேலை செய்யும் என்பதை காட்டும் ஸ்கிரீன் ஷாட் ஒன்றும் - வாட்ஸ்அப்பீட்டாஇன்ஃபோ வலைத்தளம் வழியாக - வெளியாகியுள்ளது. போன் நம்பர் ப்ரைவஸி அம்சமானது குழு அனௌன்ஸ்மென்ட் குரூப் இன்ஃபோவின் கீழ் அணுக கிடைக்கும். இந்த அம்சத்தை இயக்கும் போது, கம்யூனிட்டி அட்மின் மற்றும் ஏற்கனவே உங்களுடைய மொபைல் நம்பரை சேமித்து வைத்திருக்கும் மெம்பர்களை தவிர மற்ற நம்பர்களிலிருந்து உங்கள் போன் நம்பர் மறைக்கப்படும்.

குழு அட்மின்களுக்கு உங்களுடைய போன் நம்பர் ஏற்கனவே தெரியும் என்பதால், இந்த அம்சம் கம்யூனிட்டி மெம்பர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதுதவிர்த்து, சொந்த விருப்பத்தின்கீழ் குறிப்பிட்ட கம்யூனிட்டி மெம்பர்களுடன் உங்களுடைய மொபைல் நம்பரை பகிர்ந்துகொள்ளவும் விருப்பமும் இருக்கும். ஒட்டுமொத்தமாக வாட்ஸ்அப்பின் இந்த புதிய போன் நம்பர் ப்ரைவஸி அம்சமானது, உங்கள் போன் நம்பரை, கம்யூனிட்டியில் உள்ள மற்ற உறுப்பினர்களின் பார்வையில் பாடாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த அம்சம் தற்போது வரையிலாக அனைத்து வாட்ஸ்அப் குழு பயனர்களுக்கும் வெளியிடப்படவில்லை. வாட்ஸ்அப்பீட்டாஇன்ஃபோவின் கூற்றுப்படி, இது ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.23.14.19 வாட்ஸ்அப் பீட்டா மற்றும் ஐஓஎஸ் 23.14.0.70 பீட்டா வெர்ஷன்களை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

ஒருவேளை நீங்களும் இந்த புதிய அம்சத்தை முயற்சிக்க விரும்பினால் கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது டெஸ்ட்ஃபிளைட்டிலிருந்து வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் பில்ட்-ஐ பதிவிறக்கம் செய்யலாம். அறியாதோர்களுக்கு வாட்ஸ்அப் குழு என்றால், ஒரே மாதிரியான நோக்கங்களை கொண்ட வெவ்வேறு வாட்ஸ்அப் குரூப்களை "ஒரே குடையின்" கீழ் கொண்டுவந்து, ஒழுங்கமைத்து ஒன்றிணைக்கும் இடமாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்