Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

இனி தெரியாதவர்கள் அழைத்தால் வாட்ஸ்அப் இதை செய்யும்!

Abhinesh A.R Updated:
இனி தெரியாதவர்கள் அழைத்தால் வாட்ஸ்அப் இதை செய்யும்!Representative Image.

மெட்டாவை தலைமையாகக் கொண்டு இயங்கும் வாட்ஸ்அப் தளம், தனது பயனர்களுக்காக புதிய சேவைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது “Silence Unknown Caller” எனும் சேவையை செயல்படுத்தி உள்ளது.

முதலில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே இந்த சேவை கிடைக்கும் என நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. ஆனால், லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி வரும் ஸ்பாம் அழைப்புகளை நீங்கள் பொருட்படுத்தாமல் இருக்கலாம்.

வாட்ஸ்அப் தங்களின் புதிய அப்டேட்டுகள் வாயிலாக பயனர் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது. உங்கள் தொடர்பு பட்டியலில் அல்லாத நபர்கள் இனி உங்களை தொல்லை செய்ய முடியாது.

இதற்கிடையில், மோசடி மற்றும் ஸ்பேம் அழைப்புகளை முதற்கட்டமாக 50 விழுக்காடு குறைக்க செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML) ஆகிய ஆற்றலை வாட்ஸ்அப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இது அவசர வேலைகளில் இருக்கும் பயனர்களுக்கு சமாதானத்தை அளிக்கும் என பயனாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இனி தெரியாதவர்கள் அழைத்தால் வாட்ஸ்அப் இதை செய்யும்!Representative Image

தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகளை சைலண்ட் ஆக்குவது எப்படி?

  • வாட்ஸ்அப் செயலியை திறக்கவும்
  • வலதுபக்கம் மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகள் கிளிக் செய்யவும்
  • அதில் Settings என்பதை தேர்வு செய்யவும்
  • தொடர்ந்து Privacy > Calls என்பதை கிளிக் செய்யவும்
  • அதில் இருக்கும் “Silence Unknown Callers” சேவை ஆக்டிவேட் செய்யவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்