Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

சூப்பர் ஸ்பெஷலா களமிறங்கும் ரியல்மி 11 ப்ரோ 5ஜி.. அதுவும் இவ்ளோ கம்மி விலையில்..! | Realme 11 Pro 5g

Gowthami Subramani Updated:
சூப்பர் ஸ்பெஷலா களமிறங்கும் ரியல்மி 11 ப்ரோ 5ஜி.. அதுவும் இவ்ளோ கம்மி விலையில்..! | Realme 11 Pro 5gRepresentative Image.

இந்தியாவில் ரியல்மி 11 ப்ரோ 5ஜி மொபைல் அட்டகாசமான அம்சங்களுடன் வெளியாக உள்ளது. மொபைல் பிரியர்களால் விரும்பப்படும் பிராண்டுகளில் ஒன்றாக விளங்குவது ரியல்மி. ரியல்மி தற்போது இதன் அடுத்த வெர்சனாக ரியல்மி 11 ப்ரோ 5ஜி மொபைலை அறிமுகப்படுத்த உள்ளது. முன்னரே, ரியல்மி 11 ப்ரோ ப்ளஸ் மொபைல் ஆனது, கடந்த மே 9 ஆம் தேதி சீனாவில் அறிமுகமானதாகக் கூறப்படுகிறது. இந்தப் பதிவில், ரியல்மி ப்ரோ 11 5ஜி மொபைல் சிறப்பம்சங்கள், விலை மற்றும் அதன் முக்கிய விவரங்களைக் காண்போம்.

ரியல்மி 11 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme 11 Pro Specifications)

ரியல்மி 11 ப்ரோ 5ஜி மொபைல் கீழ்க்காணும் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

டிஸ்பிளேயைப் பொறுத்த வரை, இந்த ரியல்மி வெர்சன் AMOLED டிஸ்பிளேயைக் கொண்டுள்ளது. மேலும், 6.7 inch (17.02 cm) உடன் 1080 * 2412 பிக்ஸல் அளவைக் கொண்டுள்ளது. மேலும், இதன் புதுப்பிப்பு விகிதம் 120 ஹெர்ட்ஸ் ஆகும்.

பேட்டரியைப் பொறுத்த வரை, 5000 mAh பேட்டரி திறனுடன் லித்தியம் பாலிமர் டைப் பேட்டரியைக் கொண்டுள்ளது. 67 வாட் உடன் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியைப் பெற்றுள்ளது.

இந்த ரியல்மி 11 ப்ரோ 5ஜி மொபைல் ஆனது, MediaTek Dimensity 7050 செயலியைக் கொண்டுள்ளது.

8GB RAM மற்றும் 256 GB உள்ளடக்க சேமிப்பைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்த வரை, பின்புற கேமரா 100MP + 2 MP அளவையும், முன்பக்க கேமரா ஆனது 16MP அளவையும் கொண்டிருக்கும்.

சென்சாரைப் பொறுத்த வரை, On-Screen சென்சார் நிலையைக் கொண்டுள்ளது.

இந்த அனைத்து அம்சங்களும், மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அமைவதால், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் எனக் கூறப்படுகிறது.

ரியல்மி 11 ப்ரோ 5ஜி விலை (Realme 11 Pro Price)

இந்தியாவில் Realme 11 Pro 5G ஆனது, ரூ.21,390-க்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி 11 ப்ரோ 5ஜி அறிமுக தேதி (Realme 11 Pro Launch date in India)

மக்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்த ரியல்மி 11 ப்ரோ 5ஜி மொபைல் ஆனது வரும் ஜூன் 8 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்