Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

Truecaller Call Recorder: பழைய சேவைக்கு உயிர் கொடுத்த ட்ரூகாலர் ஆப்!

Abhinesh A.R Updated:
Truecaller Call Recorder: பழைய சேவைக்கு உயிர் கொடுத்த ட்ரூகாலர் ஆப்!Representative Image.

தனது பிரதான சேவையான கால் ரெக்கார்டிங் அம்சத்தை Truecaller செயலி மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இனிமுதல் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களுக்கும் இந்த சேவை கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலர் ஐடி அம்சத்துடன் பெரும்பாலான பயனர்களை கொண்டிருந்த ட்ரூகாலர் செயலிக்கு சோதனையாக வந்தது டெக் நிறுவனத்தின் அறிவிப்புகள். தனியுரிமை தகவல் திருட்டு போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அதை எல்லாம் தாங்கிக் கொண்ட நிறுவனம், முன்னணி இயங்குதள டெவலப்பர்களான கூகுள், ஆப்பிள் போட்ட ஸ்கெட்சில் மாட்டிக்கொண்டது.

Truecaller Call Recorder: பழைய சேவைக்கு உயிர் கொடுத்த ட்ரூகாலர் ஆப்!Representative Image

நிறுத்தப்பட்ட கால் ரெக்கார்டிங் சேவை

மூன்றாம் தரப்பு செயலிகளால் தங்கள் இயங்குதளங்களில் கால் ரெக்கார்டிங் சேவையை அளிக்க விடமாட்டோம் என்ற அறிவிப்பு தான் ட்ரூகாலரை ஆட்டம் காண செய்தது. இந்த சூழலில், இயங்குதள நிறுவனங்கள் ட்ரூகாலருக்கு தற்போது பச்சைக் கொடி காட்டியுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் செயல்பட தொடங்கியுள்ள இந்த அம்சம் விரைவில் வேறு நாட்டினருக்கும் விரிவுபடுத்தப்படும் என நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ஒரு முக்கிய அறிவிப்பும் அடங்கியுள்ளது பயனர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தலாம்.

ஆம். இனிமுதல் Truecaller செயலியில் உள்ள அழைப்புகளை பதிவுசெய்யும் சேவைக்கும் நாம் பணம் தரவேண்டும். அதாவது, செயலியின் பிரீமியம் சேவையை பயன்படுத்தும் நபர்களுக்கு மட்டுமே இதனை பயன்படுத்த முடியுமாம்!

Truecaller Call Recorder: பழைய சேவைக்கு உயிர் கொடுத்த ட்ரூகாலர் ஆப்!Representative Image

ட்ரூகாலர் கால் ரெக்காடிங்கில் சேர்க்கப்பட்டுள்ள அம்சம்

என்னதான் பழைய இலவச சேவைக்கு பணம் வாங்கினாலும், பல அம்சங்களையும் நிறுவனம் தற்போது புதிதாக சேர்த்துள்ளது. அதன்படி, இனி எச்டி தரத்தில் அழைப்புகளை பயனர்கள் பதிவுசெய்து கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பதிவுசெய்யப்பட்ட அழைப்பின் தரம் மேம்படுத்தப்படும் என ட்ரூகாலர் உறுதி அளித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், ரெக்கார்ட் செய்யப்பட்ட அழைப்புகளை மொழிமாற்றம் செய்து கேட்கவும் முடியும். இதற்காக லார்ஜ் லேங்குவேஜ் மாடல் (LLM) எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல கூடுதல் அம்சங்களையும் கால் ரெக்கார்டிங் சேவையில் நிறுவனம் சேர்த்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்