Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to download Web series: இது தெரியாம வேற எங்கெங்கலாமோ போய்ல ட்ரை பண்ணோம்! இனிமே இதை ஃபாலோ பண்ணுங்க!

Priyanka Hochumin July 01, 2022 & 17:00 [IST]
How to download Web series: இது தெரியாம வேற எங்கெங்கலாமோ போய்ல ட்ரை பண்ணோம்! இனிமே இதை ஃபாலோ பண்ணுங்க!Representative Image.

How to download Web series: நீங்கள் நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அல்லது அமேசான் ப்ரைம் வீடியோ ஆகிய தளங்களை அதிகம் பயன்படுத்துபவரா? அப்ப உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் நாம் தியேட்டர்களுக்கு சென்று அந்த சத்தத்தில் நிம்மதியாக படம் பார்க்க முடியாது. அப்படி பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் இது போன்ற எந்த சஞ்சலங்களும் இல்லாமல் வீட்டில் நிம்மதியாக எச்டி குவாலிட்டியில் உங்களுக்கு பிடித்த படங்களை பார்க்க முடியும். அதற்கு இந்த ஓடிடி தளங்கள் உதவுகின்றன.

அதில் ஒரு சிக்கல்

அது என்ன சிக்கல் என்றால்! நாம் வீட்டில் இருக்கும் பொழுது தெளிவாக நடுவில் எந்த இடைவெளியும் இல்லாமல் நமக்கு பிடித்த படமோ, நிகழ்ச்சியோ அல்லது வெப் சீரிஸோ பார்க்க முடியும். ஆனால் நீங்கள் பயணம் மேற்கொண்டாலோ அல்லது உங்களின் ஆபீஸ் தூரமாக இருந்தாலோ அந்த சமயத்தில் நமக்கு டேட்டா ஒழுங்கா கிடைக்காது. எனவே தான் அதற்கு டவுன்லோட் செய்து கொண்டால் நாம் ஆஃப்லைனில் இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் பார்க்க முடியும்.

இப்படி ஒன்னு இருக்கா?

எனவே நீங்கள் இந்த ஓடிடி தளங்களின் சந்தாதாரராக இருந்தால், உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் இந்த டவுன்லோட் ஸ்ட்ரீமிங் ஆப்ஷன் பற்றி. ஒரு வேளை தெரியாதவராக இருந்தால், அதை எப்படி எளிமையான முறையில் செய்யலாம் என்று பார்ப்போம். மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் பார்க்க துடிக்கும் ஒரு சில படங்கள் அல்லது நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு இந்த டவுன்லோட் ஆப்ஷன் இருக்காது. அதனால் கவலை வேண்டாம் அதற்கும் சில வழிகள் உள்ளது.

இவங்க மட்டும் தான் பாக்க முடியும்

உங்களிடம் நெட்பிளிஸ் சந்தாதாரராக இருந்தால் கீழே கொடுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு ஒத்து வந்தால் மட்டும் இது சாத்தியம். இதுவும் எதற்காக என்றால் தங்கள் தளத்தை பயன்படுத்தும் மக்கள் எப்பொழுதும் அப்க்ரேடில் இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தானே தவிர வேற எந்த உள்நோக்கமும் கிடையாது.

  • உங்களிடம் ஐபோன், ஐபாட் மற்றும் ஐபாட் டச் ஆகிய சாதனங்களை பயன்படுத்தினால், iOS 9.0 அல்லது அதற்கு பிறகு வந்த ஓஎஸ் கொண்டு இயங்குபவையாக இருக்க வேண்டும்.
  • ஆண்ட்ராய்டு 4.4.2 அல்லது அதற்கு பிறகு வந்த ஓஎஸ் கொண்டு இயங்கும் ஆண்ட்ராய்டு மற்றும் டேப்லெட் சாதனங்களாக இருக்க வேண்டும்.
  • ஒரு வேளை நீங்கள் அமேசான் ஃபயர் டேப்லெட் வைத்திருந்தால் Fire OS 4.0 அல்லது பிறகு வந்த ஓஎஸ் கொண்டு இயங்க வேண்டும்.
  • Windows 10 அல்லது Windows 11 டேப்லெட் அல்லது கம்ப்யூட்டர் வைத்திருக்க வேண்டும். மேலும் chromebook மற்றும் chromebox போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல் இருக்க வேண்டும்.

இந்த அனைத்து கண்டிஷனுக்கு கீழ் வரும் டிவைஸ்கள் ஈஸியாக டவுன்லோட் செய்யமுடியும். அது எப்படி? உங்களிடம் இருக்கும் நெட்பிளிஸ் ஆப்பை ஓப்பன் செய்து டவுன்லோட்  டாப்-ஐ கிளிக் செய்யவும். இதுவே விண்டோஸ் 11 அல்லது 12 வித்திருந்தால் menu-வை ஓப்பன் செய்யவும். ஒவ்வொரு டிவைஸ்களுக்கு ஏற்ப "See What You Can Download", "Find Something to Download", "Find More to Download", அல்லது "Available for Download" ஆகிய ஆப்ஷன்கள் உங்களுக்கு தெரியும். இப்பொழுது நீங்கள் பார்க்க விரும்பும் நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதன் description page இல் இருக்கும் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும். இங்கு நீங்கள் ஒரு எபிசோடு அல்லது முழு சீரிஸையும் டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஆனால் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு download season என்னும் விருப்பம் தோன்றும்.

இப்ப அமேசான் ப்ரைம் வீடியோ

இதில் நெட்பிளிஸ் அளவுக்கு கட்டுப்பாடுகள் இருக்காது. இருப்பினும் அமேசான் நிறுவனம் யாரெல்லாம் பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளது தெரியுமா? iOS, Android, macOS அல்லது Windows 10 ஓஎஸ் மற்றும் ஃபயர் டேப்லெட் ஆகிய சாதனங்களுக்கு கீழ் இயங்கும் ப்ரைம் வீடியோ ஆப் மூலம் மூவிஸ், வெப் சீரிஸ் ஆகியவை டவுன்லோட் செய்துகொள்ளலாம். உங்களுக்கு விரும்பும் கன்டென்ட்களை கண்டறிந்து அதனை டவுன்லோட் செய்துகொள்ளவும். பிறகு "My Stuff" என்கிற டேப்-ஐ கிளிக் செய்து டவுன்லோட் செய்த கன்டென்ட்களை கண்டு மகிழலாம்.

இதுவும் அதே தான்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் அதே தான். படத்தை தேடி - அதனை டவுன்லோட் செய்து - menu வில் சென்று ஆஃப்லைனில் பார்க்கலாம். 

How to download Web series, how to download web series from hotstar, how to download web series from netflix on laptop, how to download web series from amazon prime video, how to download web series from netflix without subscription, how to download amazon web series, how to download disney hotstar web series, web series download, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்