Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Xiaomi 12S Series Price in India: கேமரா சென்சாரில் புது புரட்சி...ஐபோன்களை ஓரங்கட்டிய Xiaomi! அப்படி என்ன இருக்கு?

Priyanka Hochumin July 01, 2022 & 09:45 [IST]
Xiaomi 12S Series Price in India: கேமரா சென்சாரில் புது புரட்சி...ஐபோன்களை ஓரங்கட்டிய Xiaomi! அப்படி என்ன இருக்கு?Representative Image.

Xiaomi 12S Series Price in India: சீனாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi மக்களுக்கு என்ன வேண்டும் என்று தெளிவாக தெரிந்துகொண்டு அதற்கேற்ப அல்ட்ரா லெஜெண்ட் ஸ்மார்ட்போன்களை உருவாக்குகின்றனர். அதற்கான சாம்பிள் தான் இந்த தகவல்.

மக்களாகிய நாம் ஒரு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றால் - கேமரா, குவாலிட்டி மற்றும் நம்முடைய பட்ஜெட்டிற்குள் இருக்கிறதா என்பதன் அடிப்படையில் தான் வாங்குவோம். இருப்பினும் காலம் மாற மாற மக்களும் மாறித்தான் ஆகவேண்டும். இப்போதெல்லாம் அதையும் தாண்டி போனில் என்ன பிராஸசர் இருக்கிறது, போனில் இருக்கும் இணைப்பு வசதிகள் என்ன என்று பிரிச்சு மேஞ்சி தான் வாங்க முடிவெடுக்கின்றனர். இதுவும் ஒரு வகையில் நல்லது தான், ஏனெனில் மக்களும் அப்டேட் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள். இது தான் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிகவும் 'சேலென்ஞ்' ஆன விஷயம்.

அதற்கு தான் இந்த கண்டுபிடிப்பு

சீனாவில் அடுத்த வாரம் Xiaomi 12S சீரிஸ் அறிமுகப்படுத்துவதாக Xiaomi நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சீரிஸில் Xiaomi 12S, Xiaomi 12S ப்ரோ மற்றும் Xiaomi 12S அல்ட்ரா ஆகிய மூன்று புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அடங்கும். சரி இதில் என்ன புது கண்டுபிடிப்பு என்றால்? சோனி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட 1-இன்ச் சென்சார், Xiaomi 12S அல்ட்ரா ஸ்மார்ட்போன் கேமராவில் பயன்படுத்தப்பட்ட உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவ்ளோ தானா? என்று நினைக்காதீர்கள். 1-இன்ச் சென்சார் என்பது Samsung Galaxy S22 Ultra ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா சென்சாரை விட 1.7 மடங்கு பெரிதாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். சரி இப்ப இது இருப்பதால், இந்த ஸ்மார்ட்போனின் கேமரா நமக்கு எத்தகைய போட்டோவை எடுக்க அனுமதிக்கும் என்று தெரியனுமா? வாருங்க பார்ப்போம். ஒரு சிறந்த போட்டோக்கு ஆதாரம் அதற்கு கிடைக்கும் வெளிச்சம் தான். அப்போது தான் கேமரா மிக தெளிவாக போட்டோ எடுக்க முடியும். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட Sony IMX989 என்னும் புது சென்சார் DSLR போன்று ஸ்மார்ட்போனின் கேமராவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல உதவுகிறது. இருப்பினும் இந்த புது சென்சாரின் முழு செயல்பாடு பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இது வேற லெவல் காம்போ

சரி இது தான் இப்படி ஒரு ஷாக் என்று பார்த்தால், Xiaomi 12S சீரிஸில் வெளியாகும் அனைத்து ஸ்மார்ட்போன்களின் கேமராவும் ஜெர்மன் நாட்டு கேமரா தயாரிப்பாளரான லைகா (Leica) உடன் பார்ட்னர்ஷிப் சேர்ந்து உருவாக்கப்பட்டது. பாருங்க Xiaomi + Sony + Leica கேட்கும் போதே வாங்கணும்னு தூண்டுதுல. இவர்கள் இணைந்து உருவாக்கப்பட்ட Xiaomi 12S சீரிஸ் ஸ்மார்ட்போன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்று ஜூலை 4 ஆம் தேதி பார்ப்போம். ஏனெனில் இந்த பிராண்ட் நியூ ஸ்மார்ட்போன் ஜூலை 4 அன்று சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாக போகிறது.  இந்தியாவுக்கு எப்போது அறிமுகமாகும் என்று கேட்டால், சாத்தியமா தெரியாது! ஆனால் கண்டிப்பாக வரும்.

Xiaomi 12S Series Price in India, xiaomi 12s ultra, xiaomi 12s pro, xiaomi 12s price in india, xiaomi 12s ultra price in india, xiaomi 12s pro price in india, xiaomi 12s ultra specs, xiaomi 12s series camera sensor, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்