Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Steps to do When Your Phone is Lost Tamil: உங்க போன் தொலைஞ்சிடுச்சா...யோசிக்காமல் இதை பண்ணுங்க...அப்புறம் உங்க இஷ்டம்!

Priyanka Hochumin August 03, 2022 & 12:15 [IST]
Steps to do When Your Phone is Lost Tamil: உங்க போன் தொலைஞ்சிடுச்சா...யோசிக்காமல் இதை பண்ணுங்க...அப்புறம் உங்க இஷ்டம்!Representative Image.

Steps to do When Your Phone is Lost Tamil: நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியுள்ளது ஸ்மார்ட்போன். அது எந்த அளவுக்கு என்றால் ஸ்மார்ட்போன் இல்லாமல் நம்மால் வாழவே முடியாது என்ற அளவுக்கு தற்போது சூழ்நிலை மாறியுள்ளது. அப்படி இருக்கையில் ஒருவேளை உங்களுடைய ஸ்மார்ட்போன் களவாடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

இது இல்லாமல் கையெல்லாம் உதறுதுபா....

இன்றைய நடைமுறையில் சோப்பு வாங்குறது முதல் ஒருவருக்கு பணம் பரிமாற்றம் வரை அனைத்தும் ஸ்மார்ட்போனில் நடைபெறுகிறது. இது ஒருவேளை தெரியாத நபரிடம் சென்றுவிட்டால் உங்களுடைய முழு ஜாதகமும் அவருக்குத் தெரிந்துவிடும். அதனை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் தவறாக பயன்படுத்தலாம். எனவே, அப்படி உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்து விட்டால் நீங்கள் அழுது கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்க நேரம் கிடையாது. உங்களுடைய பணம், முக்கிய டேட்டா போன்றவற்றை பாதுகாக்க இவற்றை செய்யுங்கள்.

ஃபஸ்ட் சிம்கார்டை கிளோஸ் பண்ணுங்க!

ஒரு ஸ்மார்ட்போனில் இருந்து முக்கிய தகவல்களை பெற வேண்டுமெனில் சிம் கார்டு இல்லாமல் முடியாது. எனவே உங்களின் ஸ்மார்ட்போன் தொலைந்து விட்டது என்று உறுதியான உடன் உங்களுடைய சிம் கார்டை செயலிழப்பு செய்து விடுங்கள். இதன் மூலம் உங்களுடைய பணம் பரிவர்த்தனைகளை நம்மால் தடுக்க முடியும். ஏனெனில் சிம் கார்டு செயலிழந்து விட்டால் பணம் பரிவர்த்தனைக்கு தேவைப்படும் எந்த ஒரு OTP-யும் வராது.

மொபைல் பேங்கிங் சர்வீசஸ்

அடுத்த முக்கியமான ஸ்டெப் இது தான். உங்களின் மொபைல் பேங்கிங் சர்வீஸ்களை முடக்கி விடுங்கள். இதனை செய்து விட்டால் பணம் இழப்பிற்கான அபாயம் பாதியாக குறைந்துவிடும்.

நெக்ஸ்ட் UPI சேவை

சரி மொபைல் பேங்கிங் சர்வீஸ் இல்லையென்றால் என்ன, அதான் UPI பேமெண்ட் இருக்குல்ல அதை பார்ப்போம் என்று நினைக்கலாம். அதனால் உடனடியாக UPI பேமெண்ட் சேவையை முடக்கி விடுவது நல்லது.

கூகுள் பே, பேடிஎம்

நம்ப போன்ல இத்தனை பேமெண்ட் ஆப்ஷன் இருந்தா என்ன பண்றது. சிம் கார்டு, வங்கி சேவை, UPI எல்லாம் முடிந்த பிறகு போனில் பணம் பரிவர்த்தனைக்கு யூஸ் செய்யும் கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகளை முடக்கி விடுங்கள். அதனை செய்ய கஸ்டமர் கேர் எண்ணுக்கு போன் செய்து உங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். 

இமெயிலை லாக்-அவுட் செய்யவும்

நம்முடைய பணம் மட்டும் அல்லாது பர்சனல் விவரங்கள் மற்றும் போட்டோக்களை கூட தவறான முறையில் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, உங்களின் அனைத்து இமெயில் அக்கவுண்ட்களில் இருந்து லாக்-அவுட் செய்துவிடுங்கள். இதை மூலம் நம்முடைய முக்கிய தகவல்கள் தகாத முறையில் பயன்படுவதை தவிர்க்கலாம்.

பாஸ்வோர்ட் சேஞ்

நாம் அதிகம் சோசியல் மீடியாக்களை பயன்படுத்துவோம். உங்களுக்கே தெரியும் சோசியல் மீடியா எந்த அளவுக்கு ஆபத்தான ஒன்று. ஒரு முறை நம்முடைய டேட்டா வெளியேறிவிட்டால் தீ பற்றியது போல் உலகம் முழுவதும் பரவும். எனவே, அனைத்து சோசியல் மீடியாக்களிலும் பாஸ்வோர்ட்டை மாற்றி விடுங்கள். அப்பொழுது மற்றவர்கள் எளிதாக உள்ளே சென்று பார்க்க முடியாது. இதன் மூலம் நீங்கள் உங்களின் பிரைவசியை பாதுகாத்துக் கொள்ளலாம்.

எப்.ஐ.ஆர் ரொம்ப முக்கியம் பங்கு...

இந்த ஸ்டெப் எல்லாம் முடிந்த பிறகு நீங்கள் தாராளமாக காவல்துறை சென்று போன் காணவில்லை என்று புகார் அளிக்கலாம். இவற்றை எல்லாம் செய்தும் உங்களுடைய போன் தவறாக பயன்படுத்தப்பட்டாலோ அல்லது பணம் திருடப்பட்டாலோ காவல்துறையில் அளித்த புகாரின் எப்.ஐ.ஆர் நகல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

Steps to do When Your Phone is Lost Tamil, phone lost what to do, phone lost how to block sim, what to do when phone is lost india tamil, what to do if phone gets lost tamil, what to do when phone is stolen india tamil, what to do if we lost our mobile in india tamil, what to do when we lost phone tamil, steps to do if phone is lost india tamil, steps to do if phone is lost india tamil nadu, steps to do if phone is lost india tamil meaning,


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்