Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to: உங்க போன் அப்டேட் பண்ண அப்புறம் பிரச்சனையா...? இங்க புகார் கொடுத்த இலவசமாக சர்விஸ் செய்யலாம்..!

Manoj Krishnamoorthi Updated:
How to: உங்க போன் அப்டேட் பண்ண அப்புறம் பிரச்சனையா...? இங்க புகார் கொடுத்த இலவசமாக சர்விஸ் செய்யலாம்..!Representative Image.

இன்றைய டிஜிட்டல் சமுதாயத்தில் அப்டேட் என்ற வார்த்தை சாதாரணமாகிவிட்டது. அதுவும் அப்டேட் என்ற விஷயம் நாம் அதிகம் பயன்படுத்து இடம் எது என்று தெரிகிறதா...? அது தான் மொபைல், கம்யூட்டர் போன்ற மின்சாதனங்கள் ஆகும். இன்று பெரும்பாலும் நாம் எதாவது ஒரு விதத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொண்டுதான் வருகிறோம். அந்த தொழில்நுட்பத்தில் அடிக்கடி நாம் செய்யும் ஆப்களையோ இல்லை நம் சிஸ்டம் அல்லது மொபைலையோ அப்டேட் செய்வோம். 

நம் மொபைல் அல்லது ஆப்புகளை அப்டேட் செய்வது தற்போதைய டெக்னாலஜி உடன் இணைந்து செயல்படுவதற்கு தான். ஆனால் அப்டேட் செய்த பிறகு சிக்கல் ஏற்பட்டால் என்ன செய்வது என்பதை பார்போம்.

How to: உங்க போன் அப்டேட் பண்ண அப்புறம் பிரச்சனையா...? இங்க புகார் கொடுத்த இலவசமாக சர்விஸ் செய்யலாம்..!Representative Image

என்ன செய்வது..?

கடந்த சில நாட்களாக சிலர் சமூக வலைத்தளத்தில் அப்டேட் செய்த பிறகு மொபைலில் நடுவில் கீரின் லைட் கோடு வருகிறது என தகவல் வெளிவந்தது. இதில் குறிப்பிட்ட ஒரு பிராண்டு மட்டுமில்லாமல் நம்பிக்கையான சில பிராண்டின் மொபைலிலும் இது மாதிரியான சில  சிக்கல்கள்  ஏற்பட்டுள்ளது. பொதுவாக இந்த மாதிரியான சிக்கல் ஏற்பட்டால் முதலில் சர்வீஸ் செண்டர் செல்வது தான் சரியான தீர்வு. அதுவும் அந்த நிறுவனத்தின் அஃப்பிஸ்சியல் சர்விஸ் சென்டர் என்றால் சிறப்பு. பெரும்பாலும் இந்த பிரச்சனை வாரண்டியின் மூலம் சரி செய்து தரப்படும். 

ஒருவேளை நம் வாரண்டி காலம் முடிந்து இருந்து, அப்டேட் மூலம் மொபைலில் பிரச்சனை வந்தால் சர்விஸ் சென்ட்ர் இலவசமாக சரி செய்து தர வேண்டும். அப்படி சரி செய்ய பணம் கேட்டால் நம் மொபைலை "Grievance Registration" புகார் அளிக்க வேண்டும். 

நம் கோரிக்கை சில ஆவணங்கள் கேட்கப்படும், சில நாட்களில் நம் ஒரு மெயில் வரும். அதை வைத்து அந்த சர்விஸ் சென்டரை அணுகினால். நம் தொலைப்பேசிக்கு அப்டேட் மூலம் ஏற்பட்ட சாஃப்ட்வேர் பிரச்சனை இலவசமாக பழுது பார்த்து தரப்படும்.   

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்