Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to reduce Laptop Heat: லேப்டாப் சூடாகி தீ பிடிப்பது எப்படி தெரியுமா? தெரிஞ்சிங்கோங்க!

Priyanka Hochumin July 22, 2022 & 13:00 [IST]
How to reduce Laptop Heat: லேப்டாப் சூடாகி தீ பிடிப்பது எப்படி தெரியுமா? தெரிஞ்சிங்கோங்க!Representative Image.

How to reduce Laptop Heat: தற்போது எந்த அளவுக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து இருக்கிறதோ அதே அளவுக்கு லேப்டாப் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் எண்ணற்ற பிரச்சனைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

ஒரு நாளைக்கு ஒன்னு அல்லது இரண்டு மணி நேரம் லேப்டாப் பயன்படுத்தினால் பரவால்ல. ஒரு நாளைக்கு பத்து மணி நேரதிற்கும் அதிகமாக பயன்படுத்தினால் லேப்டாப் என்ன ஆவது? இதன் விளைவாக லேப்டாப் சூடாகும், பிறகு அதுவே தீவிரமாகி லேப்டாப் பற்றி எரியக்கூடும். எதனால் இப்படி நடக்கிறது? இதற்கு என்ன தீர்வு? என்று உங்களுக்குத் தெரிந்துகொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.

காரணம் இதுவா....

லேப்டாப் சூடாவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமான ஒன்று சாப்ட்வேர் கோளாறாக இருக்கலாம். அதுமட்டும் அல்லாது சுற்றுசூழல், லேப்டாப் பயன்படுத்தும் அறையின் வெப்பநிலை என்று ஏராளமான காரணங்கள் உள்ளன. அதனைப் பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

நமக்கு ஃபேன் எப்படியோ, லேப்டாப்-க்கும் அப்படி தான்!

எப்படி என்றால், லேப்டாப் இல் இருக்கும் Chip, IC, Circuit Board ஆகியவற்றில் இருந்து உருவாகும் வெப்பத்தை வெளியேற்ற ஒரு சிறிய Motor Fan பொருத்தப்பட்டுள்ளது. அது லேப்டாப் இல் உருவாகும் வெப்பத்தை வெளியேற்றி லேப்டாப் சூடாவதை தடுக்கிறது. அப்படி பட்ட இந்த ஃபேன் லேப்டாப் இன் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் அதிக நேர பயன்பாட்டின் காரணமாக தூசுக்கள் சேர்ந்து கொண்டு வெப்ப காற்றை வெளியேற்றும் துளைகளை (Holes) அடைத்துக்கொள்கிறது. இதன் காரணமாக அந்த சூடான காற்று வெளியே செல்ல முடியமால் இருப்பதால், லேப்டாப் சூடாகிறது. இதனை தடுக்க அடிக்கடி லேப்டாப்பை ஓபன் செய்து சுத்தம் செய்யவும். அது எப்படி செய்யவேண்டும் என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், நிபுணர்களிடம் அறிவுரை கேட்கலாம் அல்லது லேப்டாப் Vaccum Cleaner வாங்கி பயன்படுத்தலாம்.

லேப்டாப் சூட்டை தடுக்க உங்களுக்கு மிகவும் தேவையான டிப்ஸ் இதோ. இந்த இரண்டு ஐடியாவும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இப்படியும் ட்ரை பண்ணுங்க! (Laptop Desk)

நாம் லேப்டாப்பை ஏதேனும் டேபிள் மீது வைத்து பயன்படுத்தும் பொழுது, வெப்ப காற்று வெளியே செல்ல முடியமால் இருக்கும். அதனால் கூட லேப்டாப் சூடாகலாம். எனவே, லேப்டாப் பயன்படுத்தும் பொழுது கற்று வெளியே செல்லும் வகையில் இருக்கும் பொருட்களை வைத்து பயன்படுத்தலாம்.

இதுக்காகவே உருவாக்கப்பட்ட கேஜெட்...

அடுத்தது இந்த பிரச்னைக்கு தீர்வு காண ஆன்லைனில் ஒரு கேஜெட்  இருக்கிறது. அது என்னவென்றால், அது தான் Laptop Cooling Pad. இது லேப்டாப் இல் இருக்கும் யூஎஸ்பியில் இருந்து வரும் மின்சக்தி மூலம் இயங்குகிறது. இந்த கூலிங் பேடை லேப்டாப் ஃபேன் கீழ் வைத்து பயன்படுத்தும் பொழுது, உள்ளே உருவாகும் வெப்ப காற்றை அப்படியே வெளியேற்ற உதவுகிறது.

இது தான் பாஸ் மெயின்!

நீங்கள் வேலை விசெய்யும் நேரத்தில் அதிக சாப்ட்வேர் அல்லது அப்ளிகேஷன்களை ஓபனாக வைத்திருந்தால் லேப்டாப் சீக்கிரம் சூடாகும். ஏனென்றால் அதிக மெமரி கொண்ட சாப்ட்வேர்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் பொழுது லேப்டாப் அதிவேகமாக செயல்படும். எனவே, அதிக மெமரி கொண்ட சாப்ட்வேர் பயன்பாட்டை குறைத்து விடுங்கள் அல்லது அதை பயன்படுத்தும் பொழுது மற்ற சாப்ட்வேர், அப்ளிகேஷன்களை பயன்படுத்தாமல் இருங்கள்.

லேப்டாப்பை வெப்பம் குறைவாக இருக்கும் இடத்தில இருந்து தான் பயன்படுத்த வேண்டும். வெப்பம் அதிகமாக இருக்கும் இடத்தில் இருந்து பயன்படுத்தினால், சீக்கிரம் சூடாகிவிடும். எனவே தான் ஐடி நிறுவனங்கள் எப்பொழுது AC அறையில் லேப்டாப்பை பயன்படுத்துகின்றனர்.  

How to reduce Laptop Heat, laptop heating problem solution, how to stop overheating laptop when gaming, why is my laptop so hot?, laptop cooling pad, How to reduce Laptop Heat while charging, How to reduce Laptop Heat windows 10, how to avoid laptop heat, how to prevent laptop heat, How to reduce Laptop Heating issue, how to reduce dell laptop heat, how to reduce hp laptop heat,  

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்