Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Top 10 Internet Users | இதுலயும் சீனா முதலிடம் இந்தியா இரண்டாவது இடம் இன்டர்நெட் யூசர்களின் பட்டியல்

Priyanka Hochumin Updated:
Top 10 Internet Users | இதுலயும் சீனா முதலிடம் இந்தியா இரண்டாவது இடம் இன்டர்நெட் யூசர்களின் பட்டியல்  Representative Image.

டெக்னாலஜி வளர்ச்சியின் ஒரு காரணம் இன்டர்நெட். உலகத்தில் இருக்கும் மக்கள் தொகையில் 5.07 பில்லியன் மக்கள் இன்டர்நெட் யூசர்களாக இருக்கின்றனர். இது உலகத்தின் மக்கள் தொகையில் 63.5% ஆகும். அதாவது இப்போது இருக்கும் நிலையில் இன்டர்நெட் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டனர் மக்கள். உலகளவில் அந்தந்த பகுதிகளுக்கு இடையில் இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் இருக்கின்றனர். கிழக்கு ஆசியாவில் 1.16 பில்லியன் இன்டர்நெட் யூஸர்கள் உள்ளனர், அதே நேரத்தில் ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் யூஸர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.  

2022 ஆம் ஆண்டில் அதிக இன்டர்நெட் யூசர்கள் கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ.

1. சீனா

மக்கள் தொகையில் முதல் இருக்கும் சீனா (1.45 பில்லியன்) சமீபத்திய நிலவரப்படி சுமார் 1.02 பில்லியன் இன்டர்நெட் யூஸர்கள் இருக்கிறார்கள்.

2. இந்தியா

சீனாவை அடுத்த மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தை பிடித்த இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத்தில் 658 மில்லியன் இன்டர்நெட் யூஸர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த ஜூலை மாதம் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் அறிக்கை படி, 692 மில்லியன் இன்டர்நெட்  யூஸர்கள் உள்ளனர் என்று கூறி இருக்கிறது.

3. அமெரிக்கா

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் நிலவரப்படி, அமெரிக்காவில் சுமார் 307.2 மில்லியன் இன்டர்நெட் யூஸர்கள் இருக்கின்றனர். மேலும் அமெரிக்காவின் Internet penetration rate தெரிவிப்பது, அது மொத்த மக்கள்தொகையில் 92 சதவீதமாக உள்ளது.

4. இந்தோனேஷியா

ஜனவரி 2022 ஆம் ஆண்டின் நிலவரப்படி, இந்தோனேஷியாவின் மொத்த மக்கள் தொகை 277.7 மில்லியனாகும். அத்துடன் ஒப்பிடுகையில் இன்டர்நெட் யூசர்களின் எண்ணிக்கை சுமார் 204.7 மில்லியன் ஆகும்.

5. பிரேசில்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 165.3 மில்லியன் இன்டர்நெட் யூஸர்களை பிரேசில் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கையானது மொத்த மக்கள் தொகையில்  77% இணைய ஊடுருவல் விகிதத்தை கொண்டுள்ளது.

6. ரஷ்யா

ஜனவரி 2022 ஆம் ஆண்டின் அடிப்படையில், 145.9 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ரஷ்யா 129.8 மில்லியன் இன்டர்நெட் யூசர்களைக் கொண்டுள்ளது.

7. ஜப்பான்

என்ன தான் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் நடப்பாண்டில் ஜப்பான் 94% இணைய ஊடுருவல் விகிதத்துடன் ஜப்பான் 118.3 மில்லியன் இன்டர்நெட் யூஸர்களை கொண்டுள்ளது.

8. நைஜீரியா

109.2 மில்லியன் யூசர்களைக் கொண்டு நைஜீரியா எட்டாம் இடத்தில் இருக்கிறது.

9. மெக்சிகோ

130.9 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மெக்சிகோ 96.87 மில்லியன் இன்டர்நெட் யூசர்களைக் கொண்டு கடையில் இருந்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

10. ஜெர்மனி

78.02 மில்லியன் இன்டர்நெட் யூசர் கொண்ட ஜெர்மனி, நாட்டின் மொத்த ஜனத்தொகையில் இருந்து 93% இணைய ஊடுருவல் விகிதத்துடன் கடைசி இடத்தில் இருக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்