Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

NPCI அறிவிப்பால் கிரெடிட் கார்டு பயனர்கள் ஒரே குஷி! காரணம் தெரியுமா?

Priyanka Hochumin July 27, 2022 & 09:45 [IST]
NPCI அறிவிப்பால் கிரெடிட் கார்டு பயனர்கள் ஒரே குஷி! காரணம் தெரியுமா?Representative Image.

நமது நாடு டிஜிட்டல் இந்தியா என்பதற்கு சான்றாக நாளுக்கு நாள் டிஜிட்டல் பேமெண்ட் செய்யும் வாடிக்கையாளர்கள் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த சமயத்தில் NPCI - நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நாம் அன்றாட வாழ்க்கையில் செய்யப்படும் அனைத்து QR Code பேமெண்ட்களும் வங்கி கணக்கு மற்றும் டெபிட் கார்டு வழியாகத் தான் செய்யப்படுகிறது. இதனை சற்று விரிவுபடுத்த கிரெடிட் கார்டு பயன்படுத்தல் என்று RIB சில வாரங்களுக்கு முன்பு அனுமதி அளித்துள்ளது. அதனை பயன்படுத்த NPCI ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இனி எல்லாமே கிரெடிட் கார்டு தான்!

RIB அனுமதி அளித்ததை தொடர்ந்து நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா QR Code பேமெண்ட் நெட்வொர்க்-ல் ரூபே கிரெடிட் கார்ட் பணப் பரிமாற்றங்களை பயன்படுத்த அணைத்து வங்கிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்துகிறது. அப்படி இது மட்டும் ஓகே ஆனால் கிரெடிட் கார்டு வர்த்தகம் வரலாறு இதுவரை காணாத புதிய உச்சத்தை தொடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அப்ப அக்செப்டன்ஸ் கட்டணம்?

நீங்க கிரெடிட் கார்டு பயன்படுத்தி பேமெண்ட் செய்யும் போது 2 சதவீதம் அக்செப்டன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். இதனை எளிமையாக்க நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா ஒரு முடிவை எடுத்துள்ளது. அது என்னவென்றால் பெரிய வியாபாரிகள் அதாவது பெரிய தலைக்கட்டுகளிடம் இருந்து மட்டும் இந்த அக்செப்டன்ஸ் கட்டணத்தை வசூலிக்கலாம். சிறு குறு வியாபாரிகளுக்கு இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டாது என்று கூறியுள்ளது. இதனை கேட்டதும் வாடிக்கையாளர்கள் எவ்ளோ மகிழ்ச்சியாக இருப்பார்கள் எங்களுக்கு சொல்லவே தேவையில்லை.

எங்கள் இலக்கை கட்டாயம் அடைவோம்!

NPCI அமைப்பின் நிறுவனர் மற்றும் சிஇஓ வான திலீப் என்ன கூறினார் என்றால், ஒரு நாளைக்கு சுமார் 100 கோடி பணப் பரிமாற்றங்களை டிஜிட்டல் பிளாட்பார்ம்ஸ் வாயிலாக செய்ய வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளோம். இதனை நிறைவேற்ற இரண்டு முக்கிய முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம்.

1. கான்டெக்ட்லெஸ் பேமெண்ட்-ஐ எளிமையாக்கும் கார்டு டோக்னைசேஷன் முறை.

2. டோல் கலெக்ஷன் போல், பார்கிங், பெட்ரோல் பங்க் போன்ற பல இடத்தில் டிஜிட்டல் பேமெண்ட் முறை.

இவை இரண்டையும் கட்டாயமாக கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது மட்டும் செயல்முறைக்கு வந்தால் அவர்களின் இலக்கு நிச்சயம் நிறைவேறும் என்பதில் சந்தேகம் இல்லை.

இது யாருக்கு லாபம்

நிச்சயமாக இது போன்ற முடிவுகள் நடுத்தர மக்களுக்கு எந்த ஒரு பயனையும் அளிக்கப்போவதில்லை. ஆனால் கிரெடிட் கார்டு சேவை நிறுவனங்களுக்கும், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இந்த ஐடியாவை அவர்களுக்கு நடைமுறைக்கு கொண்டு வந்தால் அதிக இடத்தில கிரெடிட் கார்டை மக்கள் பயன்படுத்துவார்கள், அதனால் அந்த நிறுவனங்களுக்கு இது ஒரு அதிஷ்டம் தான். 

npci update for credit card payment, npci update for credit card payment online, npci update for credit card payment in tamil, npci latest news, npci latest update, credit card qr card payment npci, credit card qr card payment npci link, credit card qr card payment npci online, national payments corporation of india, Credit card payments, Credit card QR Code payments,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்