Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சாட்ஜிபிடி செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷன் அறிமுகம்.. எப்படி பயன்படுத்துவது? | ChatGPT Android App

Nandhinipriya Ganeshan Updated:
சாட்ஜிபிடி செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷன் அறிமுகம்.. எப்படி பயன்படுத்துவது? | ChatGPT Android AppRepresentative Image.

ஒருபுறம் ட்விட்டர் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியானது அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் கூகுள் மற்றும் ஓப்பன்ஏஐ நிறுவனங்களுக்கு (Artificial Intelligence Technology) இடையேயான போட்டியும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கூகுள் இல்லையென்றால் எதுவுமே இல்லை என்றளவிற்கு கூகுள் நம்மை ஈர்த்துள்ளது. 

சில வருடங்களுக்கு முன்பு வரை கூகுளுக்கே போட்டியாக ஏதாவது தொழில்நுட்பம் வரும் என்றும், வந்த குறுகிய காலத்திலேயே கூகுளின் வளர்ச்சியை தட்டிப்பறிக்கும் என்றும் யாருமே நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம். ஆனால், அதை செய்துகாட்டியது ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி (ChatGPT)தொழிநுட்பம். அறிவியல் கண்டுபிடிப்புகளில் புதிய உச்சமாக மாறியுள்ள இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு மாதங்களில், 100 மில்லியன் பயனர்களை பெற்ற அதிவேக பயன்பாடாக புது சாதனையையும் படைத்தது. 

சாட்ஜிபிடி என்பது கட்டுரைகள் எழுதுவது, ஒரு புத்தகத்தை சுருக்கமாக கூறுவது, மென்பொருள் துறையில் பயன்படும் கோட்களை எழுவது, தகவலை மொழிபெயர்ப்பது, ரெஸ்யூம் தொடங்கி மென்பொருள் உருவாக்குவதை அனைத்தும் செய்யும் ஒரு பயனுள்ள சாட்போட் ஆகும். இங்கு நாம் கேட்டும் கேள்விக்கு தகுந்த பதில் உடனே கிடைக்கும். மேலும், நாம் அதனுடன் உரையாடவும் முடியும். 

ஏற்கனவே ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கும் அறிமுகம் செய்யவுள்ளதாக ஓப்பன்ஏஐ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சாட்ஜிபிடி செயலியின் ஆண்ட்ராய்ட் வெர்ஷன் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

ChatGPT செயலியை பயன்படுத்துவது எப்படி?

கூகுள் பிளே-ஸ்டோரில் சாட்ஜிபிடி செயலியை தேடி, இன்ஸ்டால் பட்டனை அழுத்தினால், சாட்ஜிபிடி செயலி ஆண்ட்ராய்ட் வெர்ஷன் அறிமுகமானதும் தாமாகவே, பயனாளர்களின் மொபைலில் இன்ஸ்டால் ஆகிவிடும். 

பின்னர், சாட்ஜிபிடியை ஏற்கனவே இணையதளத்தில் பயன்படுத்தி பயனாளர் கணக்கை வைத்து இருந்தால், சாட்ஜிபிடி செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு ஈமெயில் முகவரி, கூகுள் அல்லது மைக்ரோசாஃப்ட் கணக்கை பயன்படுத்தி உள்ளே நுழையுங்கள். ஒருவேளை இதுவரை கணக்கு தொடங்கப்படவில்லை என்றால், புதிய கணக்கை தொடங்க வேண்டி இருக்கும்.

அதற்கு sign up எனும் ஆப்ஷனை கிளிக் செய்து, புதிய கணக்கை தொடங்குவதற்கு தேவையான விவரங்களை உள்ளிட வேண்டும். குறிப்பாக செல்போனை எண்ணை பதிவிட வேண்டி இருக்கும். கணக்கு தொடங்கிய பிறகு பொறுப்பு தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும். அவற்றை படித்து விட்டு அனுமதி (Allow) கொடுக்க வேண்டும்.  

செயலிக்குள் நுழைந்த பிறகு டெக்ஸ்ட் பார் தோன்றும், அங்கு பயனாளர்கள் தங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை டைப் செய்து என்ட்டர் பட்டனை கிளிக் செய்தால், உங்களது கேள்விக்கான பல்வேறு சாத்தியக்கூறுகளை சாட்ஜிபிடி செயலி வழங்கும். கேள்வி எந்த அளவிற்கு தெளிவாக உள்ளதோ சாட்ஜிபிடி அளிக்கும் பதில்களும் அந்த அளவிற்கு தெளிவாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவ்வளவு தான்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்