Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Use Two WhatsApp in One Mobile: உங்க ஸ்மார்ட்போனில் இரண்டு whatsapp நம்பரை பயன்படுத்துவது எப்படி?

Priyanka Hochumin August 06, 2022 & 20:00 [IST]
How to Use Two WhatsApp in One Mobile: உங்க ஸ்மார்ட்போனில் இரண்டு whatsapp நம்பரை பயன்படுத்துவது எப்படி?Representative Image.

How to Use Two WhatsApp in One Mobile: இரண்டு சிம் ஸ்லாட் கொண்டுள்ள ஸ்மார்ட் போன்கள் தான் தற்போது அதிகமாக இருக்கிறது. எனவே, இன்னும் சிறிது காலத்தில் ஒற்றை சிம் பயன்பாடு இடம் தெரியாமல் போக அதிகம் வாய்ப்புகள் உள்ளது. மேலும் என்ன தான் இரண்டு சிம் இருந்தாலும் நீங்கள் ஒரு சிம் நம்பர் வைத்து தான் வாட்ஸ்அப் அக்கவுண்ட் பயன்படுத்த முடியும். இது நல்ல விஷயமாக இருந்தாலும் பயனர்கள் தங்களுடைய பிரைவசிக்காக இரண்டு வாட்ஸ்அப் அக்கவுண்ட் பயன்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் வாட்ஸ்அப் நிறுவனம் அதற்கு தடை விதித்துள்ளது.

நாம் எப்பையும் பிரேக் தி ரூல்ஸ் என்று கூறுவோம் அல்லவா அது போல் தான் ஒரு சில ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் ஒரு அம்சத்தை தங்களின் ஸ்மார்ட் போனில் வழங்க ஆரம்பித்துள்ளனர். அதனை பயன்படுத்தி ஒரே ஸ்மார்ட் போனில் இரண்டு வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை நம்மால் பயன்படுத்த  முடியும். அதற்கு உங்களுடைய ஸ்மார்ட் போன் கீழ் குறிப்பிட்டுள்ள பிராண்ட் போன்களாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு பிராண்டிற்கும் செட்டிங்ஸ் மாறுகிறது. சரி அது என்னென்ன பிராண்ட் மற்றும் அதில் இந்த அம்சத்திற்கு என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று பார்ப்போம்.

இது இத்தனை பேரா?

Xiaomi இல் இதனை Dual Apps என்றும், Vivo, Oppo மற்றும் Samsung ஆகிய பிராண்ட்களில் குளோன் ஆப்ஸ், ஆப் குளோன்கள் மற்றும் டூயல் மெசஞ்சர் என அழைக்கிறது. Oneplus ஸ்மார்ட்போனில் இதனை பேரலல் ஆப்ஸ் என்று குறப்படுகிறது. இப்பொழுது வாட்ஸ்அப் குளோனிங் அம்சம் வெவ்வேறு சாதனத்தில் எப்படி செயல்படும் என்பதை பார்ப்போம்.

Vivo & Oppo பயனர்கள்

போனில் செட்டிங்ஸ் மெனுவிற்கு சென்று App Clone கிளிக் செய்து வாட்ஸ்அப் என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

நீங்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டை குளோன் செய்ய ஆப்ஸின் ஐகானை லாங் பிரெஸ் செய்து '+' ஐகானை கிளிக் செய்யவும்.

பிறகு உங்களின் வாட்ஸ்அப் எண்ணை உள்ளிட்டு லாகின் செய்யவும்.

இப்ப ஒப்போக்கு வருவோம், முதலில் செட்டிங்ஸ் செல்லவும். அங்கு App Cloner என்பதை சர்ச் செய்து அதில் வாட்ஸ்அப்பை தேர்வு செய்து Clone Apps என்பதை செலக்ட் செய்யவும். அவ்ளோ தான் இப்பொழுது குளோன் செய்யப்பட்ட பயன்பாட்டை Rename செய்யும் வாய்ப்பு உஙசலுக்கு வழங்கப்படும். இதற்கு பின்பு dual WhatsApp-ஐ நீங்கள் தாராளமாக யூஸ் செய்யலாம்.

இப்ப ஒப்போக்கு செய்த அதே செயல்முறையை ரியல்மி பிராண்டிற்கும் பயன்படுத்துங்கள்.

அடுத்து ரெட்மி

உங்களிடம் ரெட்மி, Mi மற்றும் Poco ஸ்மார்ட்போன் இருந்தால் இதைப் பின்பற்றவும். Settings > Choose Apps > Dual Apps என்று தேர்வு செய்துகொள்ளுங்கள்.

அதற்கு பின்பு  வாட்ஸ்அப் Toddle பட்டனை கிளிக் செய்யவும்.

இப்பொழுது ஷ்கிரீனில் ஒரு செய்தி தோன்றும். அடுத்து தொடர, இயங்கு என்பதை தேர்ந்தெடுக்கவும்.

இது முடிந்ததும் டூயல் ஆப்ஸ் உருவாக்கப்பட்டதாக நோட்டிபிகேஷன் தோன்றும்.

இப்ப ஒன்பிளஸ்

நீங்கள் ஒன்பிளஸ் பயனராக இருந்தால் உடனே செட்டிங்ஸ் செல்லவும்.

அடுத்து Utilities > Parallel Apps என்று அடுத்தடுத்து கிளிக் செய்யுங்கள்.

அதனை தொடர்ந்து வாட்ஸ்அப் குளோனை உருவாக்க Toddle பட்டனை கிளிக் செய்யவும்.

அதற்கு பின்பு உங்களின் ஒன்பிளஸ் போனில் டூயல் வாட்ஸ்அப்பை பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

இறுதியாக சாம்சங்

செட்டிங்ஸ் மெனுவில் Advanced Features என்பதை தேர்வு செய்யவும்.

பின்பு கீழே ஸ்க்ரோல் செய்து Dual Messenger என்பதை கிளிக் செய்யவும்.

அதனை கிளிக் செய்த உடன் இணக்கமான ஆப்ஸ் பட்டியல் காட்டப்படும்.

அதில் வாட்ஸ்அப் Toggle சுவிட்சை செலக்ட் செய்யுங்கள்.

பிறகு Install -> read the disclaimer -> and Confirm என்பதை சரியாக தேர்வு செய்யவும்.

குளோன் செய்யப்பட்ட WhatsApp ஐகானின் கீழ் வலது பக்கத்தில் Dual Messenger ஐகானை கொண்டிருக்கும்.

இதனை தவிர்த்து மற்ற பிராண்ட் ஸ்மார்ட்போன்களில் ஒரு சிலருக்கு இதே போன்ற வழிமுறைகள் தான் இருக்கும். அதனை தெளிவாக பார்த்து சரியானவற்றை தேர்ந்தெடுத்து பயன் பெறுங்கள்.

How to Use Two WhatsApp in One Mobile, how to use two whatsapp in one phone, how to use two numbers in whatsapp, two whatsapp number in one mobile.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்