Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

15 வருஷமா எனக்கு சம்பளம் உயர்வு தரல...IBM நிறுவனம் மீது வழக்கு | IBM Worker on Sick Leave Sues the Company

Priyanka Hochumin Updated:
15 வருஷமா எனக்கு சம்பளம் உயர்வு தரல...IBM நிறுவனம் மீது வழக்கு | IBM Worker on Sick Leave Sues the CompanyRepresentative Image.

கடந்த 15 வருடங்களாக தனக்கு சம்பளத்தை உயர்த்தி தர வில்லை என்று IBM ஊழியர் ஒருவர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

டெலிகிராப் அறிக்கையின் படி, Ian Clifford என்ற ஊழியர் IBM நிறுவனத்தில் மூத்த தகவல் தொழில்நுட்ப ஊழியராக பணி புரிந்துள்ளார். இவர் செப்டம்பர் 2008 ஆம் ஆண்டு உடல்நிலைக் குறைவால் விடுப்பு எடுத்துள்ளார். அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு நிறுவனம் அவரை இயலாமைத் திட்டத்தில் சேர்த்து விட்டனர். பிறகு சுமார் 15 ஆண்டுகளாக அவருக்கு ஊதிய உயர்வு தராமல் பாரபட்சம் காட்டுவதாக கூறுகிறார்.

ஒவ்வொரு நிறுவனத்திலும் ஊழியர்களுக்கு ஹெல்த் பிளான் என்ற சலுகை அளிக்கப்படும். அதன் படி, கிளிஃபோர்டுக்கு 65 வயது வரை வருடத்திற்கு 54,000 பவுண்டுகள் (ரூ. 55,30,556) சம்பளத்திற்கு உத்தரவாதம் அளிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் அந்த சலுகையை ஏற்கவில்லை. ஏனெனில், காலப்போக்கில் பணவீக்கம் காரணமாக தன்னுடைய சம்பளம் குறைக்கப்படும் என்று நினைத்தார். மேலும் இவர் இயலாமைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டதால் IBM நிறுவனம் அவருக்கு இறப்பு வரை ஒப்புக்கொள்ளப்பட்ட வருவாயில் 75 சதவீதம் வழங்கப்படும் என்பதை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது. ஆனால் கிளிஃபோர்ட் வழக்கில், அவர் ஒப்புக்கொண்ட சம்பளம் 72,037 பவுண்டுகள், அதாவது 25 சதவிகிதம் கழித்து அவருக்கு வருடத்திற்கு 54,028 பவுண்டுகள் வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.

இது குறித்து நீதிமன்றம் தெரிவிப்பது, கிளிஃபோர்ட் கூறுவது ஏற்புடையது அல்ல. ஊனமுற்றோருக்கு நிறுவனம் வழங்கும் தொகை கணிசமாக இல்லை என்று வழக்கு தொடர்வது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்