Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கம்மி விலையில் சூப்பர் அம்சங்களுடன் வரப்போகிறது Oppo F23 5G போன் | Oppo F23 5G

Priyanka Hochumin Updated:
கம்மி விலையில் சூப்பர் அம்சங்களுடன் வரப்போகிறது Oppo F23 5G போன் | Oppo F23 5GRepresentative Image.

Oppo F23 5G ஸ்மார்ட்போன் சிங்கிள் ஸ்டோரேஜ் வேரியண்ட், இரண்டு கலர் ஆப்ஷனுடன் வெளியாக உள்ளது. இந்த மாடல் Oppo F23 Pro 5G உடன் வெளியாக இருந்தது, ஆனால் நிறுவனத்திடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. இருப்பினும் தற்போது வெளியான தகவல் படி, Oppo F23 5G ஸ்மார்ட்போன் மே 15 அன்று மதியம் 12 PM IST முதல் ப்ரீ-ஆர்டர் ஓப்பனிங் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னர் அவ்வப்போது வெளியான லீக் தகவல் படி, போனின் அம்சங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Oppo F23 5G ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் 6.72-இன்ச் முழு-எச்டி+ (2400x1080 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளே பேனல், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் Oppo F23 5G ஆனது ஆண்ட்ராய்டு 13-ஐ கொண்டிருக்கும் மற்றும் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 695 5G SoC மூலம் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. கேமராவைப் பொறுத்த வரையில், 64 மெகாபிக்சல் சென்சார், 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகிய ட்ரிபிள்-ரியர் கேமரா கொண்டிருக்கும். போனின் முன்புறத்தில், ஷ்கிரீனின் மையமாக சீரமைக்கப்பட்ட துளை-பஞ்ச் கட்டவுட்டில் 32 மெகாபிக்சல் முன் கேமரா சென்சார் இருக்கும். இந்த மாடல், 67W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி யூனிட்டுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Oppo F23 5G ஆனது 3.5 ஆடியோ ஜாக், 192 கிராம் எடை மற்றும் 16.6cm x 7.6cm x 0.8cm அளவு கொண்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

விலை பற்றிய விவரம் 

Oppo F23 5G ஆனது போல்ட் கோல்ட் மற்றும் கூல் பிளாக் ஆகிய கலர் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கைபேசியானது 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் என்ற சிங்கிள் வேரியண்ட் உடன் வரும். அத்துடன் 5GB விர்சுவல் ரேம் மற்றும் 1TB விரிவாக்கக்கூடிய மெமரி வழங்கப்படும்.

Tipster Sudhanshu Ambhore செய்த ட்வீட்டில் Oppo F23 5G இன் விலை விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.25,000/- முதல் ரூ.26,000/-க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் ரூ.20,000/-க்கு வாங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்