Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

India Post-delivery using Drone: பார்சல் டெலிவரி அனுப்ப ட்ரோன் டெக்னாலஜி! நல்லா இருக்கே!

Priyanka Hochumin May 30, 2022 & 17:35 [IST]
India Post-delivery using Drone: பார்சல் டெலிவரி அனுப்ப ட்ரோன் டெக்னாலஜி! நல்லா இருக்கே!Representative Image.

India Post-delivery using Drone: இந்தியாவில் ட்ரோன்களைப் பயன்படுத்தி பார்சலை டெலிவரி செய்துள்ளது தபால் துறை. இது இந்தியாவில் தொழிநுட்ப பயன்பாட்டை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளது.

நாம் இருக்கும் இடத்தில் இருந்தே சற்று தொலைவில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள கண்டுபிடிக்கப்பட்டது ட்ரோன். இது ஆரபத்தில் பெரிதளவு பயன்பாட்டில் இல்லை, இருப்பினும் இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் உதவியாக இருந்துள்ளது. அதற்கு பின்னர் ட்ரோனை கேமராவுக்காக மட்டும் பயன்படுத்தாமல் மற்ற நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. தற்போது உலக நாடுகளில் ட்ரோனின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ட்ரோனை வைத்து தபால் துறை சாதனை புரிந்துள்ளது. குஜராத்தில் கட்ச் மாவட்டத்தில், ஹபே கிராமத்தில் இருந்து நெர் கிராமத்துக்கு மருந்துகளை உள்ளடக்கிய பார்சலை ட்ரோன் மூலம் அனுப்பி வெற்றி பெற்றுள்ளனர். இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையில் சுமார் 46 கீ.மி தொலைவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தூரத்தை அந்த ட்ரோன் வெறும் 25 நிமிடத்தில் கடந்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த சோதனையில் இரண்டு கிராமங்களுக்கு இடையில் இருக்கும் தூரம், அதற்கான செலவு, அந்த பகுதிகளின் புவியியல்அமைப்பு போன்றவற்றை ஆய்வு செய்துள்ளனர். எனவே, ட்ரோன்களைப் பயன்படுத்தி டெலிவரி செய்வதால் உரிய நேரத்தில் பார்சல் சென்றடைகிறது, மேலும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சோதனையில் பங்கேற்றவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த முக்கிய தகவலை மாநிலங்களுக்கான தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தேவுசின் சௌகன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

ஸ்னாப்சாட்டின் புது அம்சம்...பிரண்ட்ஸ்-அ இன்வைட் பண்ணுங்க...மகிழ்ச்சியா இருங்க!

நமது பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக மாற்றும் திட்டத்தில் இதுவும் ஒரு முயற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ட்ரோன் உபயோகிக்கும் சேவை இத்துடன் முடிவடையாமல், விளையாட்டு, விவசாயம், பாதுகாப்பு போன்ற பல துறையில் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. 

Post delivered by drone, Post delivered by drone in india, mail delivery by drone,post delivery using drone,mail delivery using drone,drone mail delivery,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்