Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Snapchat Shared Stories: ஸ்னாப்சாட்டின் புது அம்சம்...பிரண்ட்ஸ்-அ இன்வைட் பண்ணுங்க...மகிழ்ச்சியா இருங்க!

Priyanka Hochumin May 30, 2022 & 16:15 [IST]
Snapchat Shared Stories: ஸ்னாப்சாட்டின் புது அம்சம்...பிரண்ட்ஸ்-அ இன்வைட் பண்ணுங்க...மகிழ்ச்சியா இருங்க!Representative Image.

Snapchat Shared Stories: ஸ்னாப்சாட் நிறுவனம் புதிய ஷேர்டு ஸ்டோரீஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் ஏற்கனவே ஷேர்டு ஸ்டோரீஸ் குரூப்பில் இருக்கும் பயனர்கள் மற்ற ஸ்னாப்சாட்டர்களை அழைத்து ஸ்டோரீஸ்களைப் பார்க்கவும் பங்களிக்கவும் அனுமதிக்கிறது.

இதற்கு முன்னதாக இருந்த வெர்ஸன் தனிப்பயன் கதைகளில் (Custom Stories) அந்த குரூப்பில் சேர்க்கப்பட்ட நண்பர்கள் மட்டுமே ஸ்டோரீஸ்களைப் பார்க்க முடியும். இந்த சோசியல் மீடியா ஃபிளாட்பார்ம் ஆட்டோமேட்டிக் லாங்குவேஜ் டிடெக்ஷன் (automatic language detection) மற்றும் சேர்த்தல்களைக் கண்காணிக்க வேறு சில ரிவ்யூ டூல்ஸ்களைப் பயன்படுத்தி குரூப் இன் கன்டென்ட்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சித்துள்ளது.

5000mAh பேட்டரி...ஃபேஸ் வேக் அம்சம்...விவோவின் மலிவு விலை போன் அறிமுகம்!

இந்த புதிய அம்சம் வெளியிடும் தகவலை ஸ்னாப்சாட் நிறுவனம் கடந்த வாரம் புதன்கிழமை அன்று தெரிவித்தது. ஸ்னாப்சாட் பயன்டுத்துபவர்கள் தற்போது இந்த அப்டேட்டை அவர்களின் ஆப்பில் காணலாம்.

இந்த ஷேர்டு ஸ்டோரீஸ் அம்சம் மூலம், பயனர்கள் தங்களின் ஸ்டோரீஸ்களை யார் பார்க்க வேண்டும் அல்லது யார் பங்களிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க முடியும். இது பயனர்களின் ஸ்னாப் கன்டென்ட் உடன் ஒரு புது ஒத்துழைப்பை அனுமதிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. வழக்கமாக இருக்கும் செயல்முறையை போல், ஷேர்டு ஸ்டோரீஸில் பகிரப்பட்ட ஸ்னாப் 24 மணி நேரத்தில் நீக்கப்படும். இருப்பினும் வழக்கமான பிரண்ட் ஸ்டோரீஸ் மற்றும் குரூப்களைப் போல் இல்லாமல், நண்பர்களுக்கிடையேயான சாட் மட்டுமே வைத்திருக்கப்படும். எனவே, இந்த அம்சத்தில் அரட்டை கூறு (no chat component) எதுவும் இருக்காது. மேலும் ஸ்னாப்சாட் பயனர்கள் தாங்கள் பிளாக் செய்த நபரை ஷேர்டு ஸ்டோரீஸில் இணைத்தால் உடனே அவர்களுக்கு நோட்டிபிகேஷன் மூலம் தெரிவிக்கப்படும்.

பழைய போனை எக்ஸ்சேன்ச் பண்றதுக்கு முன்ன இத கண்டிப்பா பண்ணனும்! இல்லைனா ஆபத்து

இங்கு குறிப்பிட்டுள்ள தகவல் மூலம், இந்த புதிய அம்சமானது பயனர்கள் அவர்களின் ஸ்டோரீஸ்களை யார் பார்க்க வேண்டும் போன்ற முழு கன்ட்ரோலும் அவர்களிடம் இருப்பதாக நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. முன்பு இருந்த வெர்சன் போல் இல்லாமல், நீங்க ஸ்டோரீஸ்களை யாரிடம் பகிர நினைக்கிறீர்களோ அவர்களை சேர்க்கலாம். இது ஒரு குழுவாக செயல்படும் நிறுவனங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

Snapchat shared stories feature, shared stories, custom stories

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்