Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,748.42
104.99sensex(0.14%)
நிஃப்டி22,055.70
32.35sensex(0.15%)
USD
81.57
Exclusive

இனி வாட்ஸ் அப் கால் பேசுவதற்குக் கட்டணம்….? முடிவுக்கு வரும் இலவச கால்…!

Gowthami Subramani September 25, 2022 & 19:15 [IST]
இனி வாட்ஸ் அப் கால் பேசுவதற்குக் கட்டணம்….? முடிவுக்கு வரும் இலவச கால்…!Representative Image.

வாட்ஸ் அப் அழைப்புகள் தற்போது இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி வரும் காலங்களில் பணம் செலுத்த வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022 என்ற புதிய மசோதாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதன்படி, இதகான வரைவு மசோதாவும் தயாரிக்கப்பட்டு விட்டது. இதில், டெலிகாம் தொடர்பான பல மாற்றங்களும் அடங்கியிருக்கும் நிலையில், அழைப்பு தொடர்பான மாற்றங்களும் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

இனி வாட்ஸ் அப் கால் பேசுவதற்குக் கட்டணம்….? முடிவுக்கு வரும் இலவச கால்…!Representative Image

இணைய அழைப்புக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா?

இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022-ன் படி, வாட்ஸ் அப், ஸ்கைப், ஜூம் உள்ளிட்ட தளங்கள் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இந்த தளங்கள் இலவசமாக இணையவழி தொடர்பு அழைப்புகளை வழங்கி வருகின்றன. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த செயலிகளின் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள பயனர்கள் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

இனி வாட்ஸ் அப் கால் பேசுவதற்குக் கட்டணம்….? முடிவுக்கு வரும் இலவச கால்…!Representative Image

இனி நோ இலவச வாட்ஸ் அப் கால்

அதன் படி, தற்போது வாட்ஸ் அப் அழைப்புக்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. ஆனால், இணைய பயன்பாட்டிற்காக டேட்டா கட்டணம் செலுத்துவோம். ஆனால், தற்போது பயனர்கள் இணைய கட்டணத்துடன், செயலிக்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்பட்டு வருகிறது. ஆனால், இது குறித்து எதுவும் உறுதிபடுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்