Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முற்றிலும் மேம்படுத்தப்பட்ட ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்...விலை எவ்ளோ தெரியுமா? | iPhone 15 Pro Max Specifications in Tamil

Priyanka Hochumin Updated:
முற்றிலும் மேம்படுத்தப்பட்ட ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்...விலை எவ்ளோ தெரியுமா? | iPhone 15 Pro Max Specifications in TamilRepresentative Image.

தற்போது அனைவரின் பேச்சாக இருப்பது ஐபோன் 15 சீரிஸ் ரிலீஸ் பற்றி தான். ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு பலரின் ஆர்வம் இருந்தாலும், ஐபோன் என்று வந்தால் சொல்லவா வேண்டும். நம்மால் வாங்க முடியாவிட்டாலும் அதனைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் என்று தான் பலர் நினைக்கின்றார்கள். அந்த வகையில் உலகின் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஐபோன் 15 சீரிஸ் ஸ்பெக் பற்றி பார்க்கலாம்.

ஐபோன் 15 சீரிஸில் - ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 பிளஸ் மற்றும் ஐபோன் 15 உள்ளிட்ட 4 மாடல்கள் அடங்கும். அதில் ஹை-எண்ட் மாடலான ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் பற்றிய முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

முற்றிலும் மேம்படுத்தப்பட்ட ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்...விலை எவ்ளோ தெரியுமா? | iPhone 15 Pro Max Specifications in TamilRepresentative Image

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விவரக்குறிப்புகள்:

இந்த மாடல் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் செய்யும் 6.7 இன்ச் டிஸ்பிளே கொண்டு வருகிறது. சுமார் 35 டிரில்லியன் செயல்பாடுகளுக்கான ஆதரவை அளிக்கும் ஏ17 ப்ரோ சிப் மூலம் இயங்கப்படுவதாக கூறப்படுகிறது. அத்துடன் ஜிபியு செயல்திறனை மேம்படுத்த ரே டிரேசிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இதனின் கூடுதல் சிறப்பு, நாசாவின் மார்ஸ் ரோவரில் பயன்படுத்தப்பட்ட கிரேட் 5 டைட்டானியம் சேஸ் மெட்டீரியலுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் வரலாற்றின் முக்கிய மேம்பாடாக, 10 ஜிகாபிட் டிரான்ஸ்பர் ஸ்பீடை வழங்கும் யூஎஸ்பி-3 சப்போர்ட்டை இந்த மாடல் பெறுகிறது.

முற்றிலும் மேம்படுத்தப்பட்ட ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்...விலை எவ்ளோ தெரியுமா? | iPhone 15 Pro Max Specifications in TamilRepresentative Image

கேமரா பற்றி பார்க்கையில், 24 மிமீ 35 மிமீ மற்றும் 38 மிமீ லென்ஸ் மோட் ஆதரவுடன் மேம்படுத்தப்பட்ட 48 மெகாபிக்சல் மெயின் கேமராவை, 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 120 மிமீ ஃபோக்கல் லென்த் பெரிஸ்கோப் சென்சார் உடனான 12-மெகாபிக்சல் 5x டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது. இந்த மாடல் பிளாக் டைட்டானியம், ப்ளூ டைட்டானியம், நேச்சுரல் டைட்டானியம், ஒயிட் டைட்டானியம் ஆகிய நான்கு கலர் ஆப்ஷனில் அறிமுகமாகும். ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.99,320/-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இதே விலையில் அறிமுகம் செய்யப்படுமா என்று தெரியவில்லை.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்