Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐபோன் 15 ப்ரோவின் தாறுமாறான அம்சங்கள் என்னென்ன தெரியுமா? | iPhone 15 Pro Specifications in Tamil

Priyanka Hochumin Updated:
ஐபோன் 15 ப்ரோவின் தாறுமாறான அம்சங்கள் என்னென்ன தெரியுமா? | iPhone 15 Pro Specifications in TamilRepresentative Image.

ஐபோன் 15 சீரிஸின் அடுத்த டாப் மாடல் ஐபோன் 15 ப்ரோ பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது. இதன் டிஸ்பிளே, கேமரா, பேட்டரி உள்ளிட்ட முழு விவரத்தையும் பற்றி பார்க்கலாம்.

இந்த மாடல் 120ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் செய்யும் 6.1 இன்ச் OLED Super Retina XDR டிஸ்பிளே கொண்டு வருகிறது. ஐபோன் 14 மாடலில் இருக்கும் டைனமிக் ஐலேண்ட் அம்சம் ஐபோன் 15 ப்ரோவிலும் இடம்பெற்றுள்ளது. சுமார் 35 டிரில்லியன் செயல்பாடுகளுக்கான ஆதரவை அளிக்கும் ஏ17 ப்ரோ சிப் மூலம் இயங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இது iOS 17 அடிப்படையில் இயங்குகிறது.

கேமரா பற்றி பார்க்கையில், 48-மெகாபிக்சல் (f/1.78) பிரைமரி கேமரா, 12 மெகாபிக்சல் (f/2.2, அல்ட்ரா வைட் ஆங்கிள்) கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் (f/1.78) கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது. செல்பீ பயன்பாட்டிற்கு f/1.9 துளையுடன் கூடிய 12-மெகாபிக்சல் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் பிளாக் டைட்டானியம், ப்ளூ டைட்டானியம், நேச்சுரல் டைட்டானியம், ஒயிட் டைட்டானியம் ஆகிய நான்கு கலர் ஆப்ஷனில் அறிமுகமாகும். இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி, 256ஜிபி, 512ஜிபி, 1டிபி ஆகிய ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் கிடைக்கும். Wi-Fi 802.11 b/g/n/ac/ax, GPS, Bluetooth v5.30, NFC, USB Type-C, 3G, 4G உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் அளிக்கப்பட்டுள்ளது. இன்று செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,34,900/-க்கு இந்தியாவில் விற்பனையாகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்