Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புத்தம் புதிய டெக் அம்சம்...’டைனமிக் நாட்ச்'-வுடன் ஐபோன் 15 | iphone 15 Pro Max new Tech

Priyanka Hochumin Updated:
புத்தம் புதிய டெக் அம்சம்...’டைனமிக் நாட்ச்'-வுடன் ஐபோன் 15 | iphone 15 Pro Max new TechRepresentative Image.

இன்னும் சில மாதங்களுக்குள் ஆப்பிள் நிறுவனம் அவர்களின் லேட்டஸ்ட் ஜென் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 ப்ரோ மாடலை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது ஐபோன் 15 மாடலில் இருக்கும் முக்கிய அம்சங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி மக்களை ஆர்வமுடைய செய்கிறது. சரி, அப்படி என்ன தான் புதுசா இருக்குன்னு பாப்போம்.

ஆப்பிள் நிறுவனம் 2020 ஆம் ஆண்டு அறிமுகமான ஐபோன் X மாடலில் பழைய, பாரம்பரிய நாட்ச் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனை முற்றிலும் புதிய நாட்ச்-சாக வடிவமைத்து ஐபோன் 15 இல் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மனின் கூற்றுப்படி, ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் டைனமக் ஐலேண்ட் நாட்ச்சைப் பெறும். ஐபோனில் செல்ஃபி கேமரா கட்அவுட் மற்றும் ஃபேஸ் ஐடி சென்சார்களை மறைக்க திரையின் மேற்புறத்தில் ஒரு ஓவல் வடிவத்தில் பொருத்தப்பட்டு இருப்பது தான் டைனமக் ஐலேண்ட் நாட்ச்.

ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் பார்டர் அளவை 2.2 மில்லிமீட்டரிலிருந்து 1.5 மில்லிமீட்டராகக் குறைக்க ஆப்பிள் இப்போது ‘லோ-இன்ஜெக்ஷன் பிரஷர் ஓவர்-மோல்டிங்’ அல்லது ‘எல்ஐபிஓ’ எனப்படும் புதிய டெக்னாலஜியைப் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இந்த செயல்முறை முதலில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 இல் டிஸ்ப்ளே அளவை அதிகரிக்கவும், பார்டர்களை மெலிதாக மாற்றவும் பயன்படுத்தப்பட்டது. 

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் சாதனங்களில் டைட்டானியம் பிரேம், haptic feedback உடன் கூடிய சாலிட் - ஸ்டேட் பட்டன்கள் மற்றும் அதிகரித்த ரேம் ஆகியவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் ஐபோன் ப்ரோ மாடல்களில் இடம்பெறும் என்று கூறப்படும் அம்சங்களில் USB-C போர்ட், தனிப்பயனாக்கக்கூடிய அதிரடி பொத்தான், வேகமான A17 பயோனிக் சிப், Wi-Fi 6E ஆதரவு மற்றும் மேம்படுத்தப்பட்ட அல்ட்ரா வைட்பேண்ட் சிப் ஆகியவை அடங்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்