Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

iQoo 10 Series Launch Date in India: ப்பா இப்படியும் ஒரு அம்சம் இருக்கா...iQoo 10 சீரிஸ்ல இருக்கு! வெயிட் பண்ணுங்க ஜூலை 19 வரை!

Priyanka Hochumin July 06, 2022 & 13:55 [IST]
iQoo 10 Series Launch Date in India: ப்பா இப்படியும் ஒரு அம்சம் இருக்கா...iQoo 10 சீரிஸ்ல இருக்கு! வெயிட் பண்ணுங்க ஜூலை 19 வரை!Representative Image.

iQoo 10 Series Launch Date in India: பிரபல iQoo நிறுவனம் வரும் ஜூலை 19 ஆம் தேதி அன்று சீனாவில் iQoo 10 சீரிஸ் டிவியை அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை தெரிவித்துள்ளது. 
இந்த சீரிஸின் கீழ் iQoo 10 மற்றும் iQoo 10 Pro ஆகிய இரண்டு மாடல்களை நாம் எதிர்பார்க்கலாம். iQoo ஆல் பகிரப்பட்ட ஒரு சிறிய வீடியோ கிளிப்பின்படி, iQoo 10 Legend BMW பதிப்பும் இருக்கலாம். மேலும் வரவிருக்கும் போன்களில் டூயல்-டோன் டிசைன் மற்றும் உயர்த்தப்பட்ட கேமரா தீவுடன் வருவதாக டீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC உடன் வரும் என்பதை நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போ அறிவிப்பது என்னவென்றால், ஜூலை 19 ஆம் தேதி இந்திய நேரத்தின் படி மாலை 5 மணிக்கு சீனாவில் இந்த சீரிஸ் வெளியீடு நடைபெறும் என்று கூறுகிறது.

வீடியோவில் இவ்ளோ விஷயம் தெரிஞ்சதா?

இந்த போனின் அறிமுகத்தை வீடியோ முலமாக டீஸ் செய்த நிறுவனம் நமக்கு ஒரு சில விஷயங்களை கண்டறிய உதவியது. அதில் iQoo 10 ஆனது டூயல்-டோன் ஃபினிஷ் கொண்டதாகத் தெரிகிறது. மேலும் போனின் ஒரு பகுதி கார்பன் ஃபைபர் போன்ற பொருட்களுடன் வரும் என்றும் மற்ற பகுதி லெதர் ஃபினிஷ் கொண்டு இருக்கும் என்றும் அறிவுறுத்துகிறது. இதெல்லாம் போனின் லுக் பொருந்திய தகவல்கள், இவற்றை கேட்டதும் கற்பனை செய்து பார்த்தால் அந்த போன் எவ்ளோ கிளாஸியாக இருக்கும் என்று இப்பவே தெரிகிறது.

அது மட்டும் அல்லாது கேமரா பற்றி கிடைத்த டிப் என்ன தெரியுமா? அது ஒரு உயர்த்தப்பட்ட கேமரா தீவைக் கொண்டிருக்கும், அதில் "ஈர்ப்பு புதுமையை சந்திக்கிறது" என்று பொறிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, iQoo 10 Pro இருக்கும் என்பதையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. நிறுவனம் தெரிவித்த மிரட்டும் தகவல், இதை மாடல் ஸ்மார்ட்போன் 10 வது தலைமுறை ஃப்ளாஷ் சார்ஜிங் உடன் வரும் என்று கூறியுள்ளது. முற்றிலுமாக வரிசையில் iQoo 10 மற்றும் iQoo 10 Pro ஸ்மார்ட்போன்கள் இருக்கும் என்று பரிந்துரைக்கிறது.   

iQoo 10 ப்ரோவில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ஷ்கிரீன்

6.78-இன்ச் 10-பிட் LTPO காட்சி

பிக்சல்

1440 X 3200 பிக்சல்கள்

ரெப்பிரெஷ் ரேட்

120 HZ

பிராஸசர்

குவால்கம் ஸ்னாப் டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி  கொண்டு இயக்கப்படுகிறது.

ரேம்

6GB,8GB,12GB மற்றும் 16GB

ஸ்டோரேஜ்

128GB, 256GB மற்றும் 512GB

பின் கேமரா

இரண்டு 50 மெகாபிக்சல் சென்சார்கள் மற்றும் 14.6 மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

முன் கேமரா

16 மெகாபிக்சல் ஷூட்டருடன் வரலாம்.

பேட்டரி

4700mAh

பாஸ்ட் சார்ஜிங்

200W

இதில் இருக்கும் ஸ்பெஷல் அமைப்பு என்னவென்றால், பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும். இந்த அணைத்து தகவலும் வெளியீட்டிற்கு பின்பு உறுதியாக தெரிந்துவிடும். அதே போல் விலை பற்றி எந்த தகவலையும் நிறுவனம் இன்னும் வெளியிட வில்லை. இந்த ஸ்மார்ட்போனும் இந்தியாவில் விற்பனைக்கு வருமா? இல்லையா? என்பதாகி தெரிந்துகொள்ள ஜூலை 19 வரை காத்திருக்கவும்.

iQoo 10 Series Launch Date in India, iQoo 10 price in india, iqoo 10 pro launch date in india, iqoo 10 pro release date, iqoo 10 series tv, iqoo 10 series, iQoo 10 Series price, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்