Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

Redmi K50i Price in India: போட்டான் பார்யா ஒரு ட்வீட்ட...பாத்த உடனே சும்மா மஜா தான்! Redmi K50i விரைவில் ரிலீஸ்!

Priyanka Hochumin July 05, 2022 & 12:30 [IST]
Redmi K50i Price in India: போட்டான் பார்யா ஒரு ட்வீட்ட...பாத்த உடனே சும்மா மஜா தான்! Redmi K50i விரைவில் ரிலீஸ்!Representative Image.

Redmi K50i Price in India: இந்தியாவில் கூடிய விரைவில் ரெட்மி நிறுவனம் கே சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இது ரெட்மி பிரியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இந்த ஸ்மார்ட்போன் எந்த மாதிரியான அம்சங்களை கொண்டு வரப்போகிறது, இந்த உண்மையா? இல்லையா? போன்ற முக்கிய தகவல்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

நிறுவனத்தின் அசத்தல் ட்வீட்

நடுத்தர மக்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ற ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் நிறுவனமாக ரெட்மி நிறுவனம் திகழ்கிறது. அப்படியாக தற்போது ஒரு குடும்பத்தில் எப்படியும் ஒருவராவது ரெட்மி பிராண்ட் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதற்கு ஊக்கமளிக்கும் வகையில் நிறுவனம் தற்போது ஒரு ட்வீட் ஒன்றையே வெளியிட்டுள்ளது. அதாவது 'ரெட்மி கே இஸ் பேக்' என்ற ட்வீட் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதனால் கூடிய விரைவில் இந்தியாவில் Redmi K50i-ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக அனைவரும் ஊகிக்கின்றனர். இதற்கு இன்னொரு ஆதாரமாக, சமீபத்தில் இந்திய தரநிலைகள் பணியகத்தின் (BIS) சான்றிதழ் இணையதளத்திலும் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 11T Pro இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக Redmi K50i ஸ்மார்ட்போன் வர உள்ளது.

 

அசத்தலான டிஸ்ப்ளே

இப்பொழுது பயனர்கள் அனைவரும் ஷ்கிரீனின் அளவு பெரிதாக இருப்பதை விரும்புவதால், இந்த போன் 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.6 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. வயதானவர்கள் கூட தெளிவாக பார்க்க டிஸ்ப்ளே 650 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே போதுமே இந்த போனைப் பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ள, இருந்தாலும் முழுசா பாப்போம்.

மெர்சலான ட்ரிபிள் ரியர் கேமரா

ஆப்பிள் ஆவது ஒன்பிளஸ் ஆவது, நம்ப பட்ஜெட்டில் பக்கா கேமரா கொண்டுள்ள ஒரே பிராண்ட் ரெட்மி தான். ஏன்னா, பின்புறத்தில் 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. அதே போல் நாம் அதிகம் விரும்பும் செல்பீ எடுக்க, வீடியோ கால் பேச முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமரா சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

பவர்-க்கு இது இருக்கே வேற என்ன வேணும்

குறிப்பாக Redmi K50i ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் மீடியா டெக் டைமென்சிட்டி 8100 எஸ்ஓசி கொண்டு இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்களுக்கு மெமரி அதிகமான ஸ்மார்ட்போன் வேண்டுமா? அப்ப இத விட பெஸ்ட் சாய்ஸ் எதுவும் இருக்காது. ஏனெனில் Redmi K50i ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டாண்டர்ட் இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் என்று கூறப்படுகிறது. அப்புறம் என்ன சும்மா மூவிஸ், வீடியோஸ், போட்டோஸ்-ன்னு பாத்து தள்ளலாம்.

67W பாஸ்ட் சார்ஜிங் கொண்டு மிரட்டும் ஸ்மார்ட்போன்

இதெல்லாம் பாத்தாச்சு கடைசியா நாம தெரிஞ்சிக்க வேண்டியது பேட்டரி மட்டும் தான். டிப்ஸ்டரின் கூற்றுப்படி, இந்த மாடலில் 5,080mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இது 67W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் தகவலாக இதில் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் பிரத்யேக ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை இருக்கிறது. மேலும் இந்த போன் 163.6x74.3x8.8mm அளவையும் 200 கிராம் எடையும் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது இவங்களது இல்லையாம் அப்புறம் யாருடையது?

இதுவரை கூறிய விவரக்குறிப்புகளில் சரி பாதி, சீனாவில் மே மாதத்தில் வெளியான ரெட்மி நோட் 11 டி ப்ரோ போனின் விவரக்குறிப்புகளுக்கு ஒத்ததாக கூறப்படுகிறது. எனவே, இந்த போனைப் போல தான் வரப்போகும் Redmi K50i இருக்கப்போகிறது. அதனால் இதில் என்னென்ன மாற்றங்களுடன் Redmi K50i ஸ்மார்ட்போன் வரும் என்பதை நாம் கூடிய விரைவில் தெரிந்துகொள்வோம்.  

Redmi K50i Price in India, redmi k50i launch date in india, redmi k50i 5g, redmi k50i pro, redmi k50i pro price in india, redmi k50i specs, redmi k50i series, redmi k50i specifications in Tamil, redmi k50i flikpart, redmi k50i camera quality, redmi k50i camera sensor, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்