Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,953.43
464.44sensex(0.64%)
நிஃப்டி22,132.90
137.05sensex(0.62%)
USD
81.57
Exclusive

iQoo Neo 7 Pro-வின் மிரள வைக்கும் அம்சங்கள்...விலை தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க | iQoo Neo 7 Pro Specifications

Priyanka Hochumin Updated:
iQoo Neo 7 Pro-வின் மிரள வைக்கும் அம்சங்கள்...விலை தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க | iQoo Neo 7 Pro Specifications Representative Image.

iQoo விரைவில் அதன் நியோ 7 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், போனின் அறிமுகத்திற்கு முன்பே அதன் அம்சங்கள் குறித்த விவரங்கள் கசிந்துள்ளது. இந்த பதிவில் அறிவிக்கப்படும் விவரங்கள், மிகவும் நம்பகமான கீக்பெஞ்ச் தளத்தில் இருந்து பெறப்பட்டதாகும். Geekbench இல் iQoo Neo 7 5G ஸ்மார்ட்போன் மாடல் எண் I2217 என்பதன் மூலம் கண்டறியப்பட்டது.

தரவுகளின் படி, இந்த கைபேசியானது ஆக்டா-கோர் சிப்செட் மூலம் 1.8GHz க்ளாக் செய்யப்பட்ட 4 கோர்கள், 2.50GHzல் க்ளாக் செய்யப்பட்ட மூன்று கோர்கள் மற்றும் 3GHz இல் 1 கோர் க்ளாக் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சோதனை செய்யப்பட்ட போனில் 7.17 ஜிபி ரேம் உள்ளதாகவும், தொலைபேசி 8 ஜிபி ரேம் மாறுபாட்டைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்போது, iQoo இந்த போனை மற்ற ரேம் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்குகிறது.

இந்த மாடல் ஸ்மார்ட்போன் சீனாவில் OriginOS மூலமாகவும், உலகின் மற்ற பகுதிகளில் FunTouch OS 13 மூலமாக்கவும் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெஞ்ச்மார்க் மதிப்பெண்களைப் பொருத்தவரையில், சிங்கிள் கோரில் 1572 புள்ளிகளையும், மல்டி கோரில் 4000 புள்ளிகளையும் பெற்றுள்ளது. கூடுதலாக, Qualcomm Snapdragon Adreno 730 GPU சிப்செட் மூலம் என்று தெரிவிக்கப்படுகிறது. அது மட்டும் இன்றி 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் அம்சங்களைக் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்