இப்ப தான் வந்துச்சு Galaxy M53 5G, ஆனா அதுக்குள்ள அடுத்த மாடல் பற்றிய தகவல் Geekbench இல் காணப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரமும் இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த வருடம் தொடக்கத்தில் வெளியான Galaxy M53 5G ஸ்மார்ட்போன் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சாம்சங் நிறுவனத்தின் அடுத்த மாடல் போனின் ரிலீஸ் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. உலகின் அனைத்து பிராண்ட் ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்டை வெளியிடும் Geekbench இல் Samsung Galaxy M54 5G போனின் அம்சங்கள் மற்றும் வெளியாகப் போகும் நாள் குறித்த தகவல்கள் காணப்படுகிறது.
நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் Samsung Galaxy M54 5G ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இறுதி அல்லது 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகலாம். அதில் கூறியுள்ள தகவல் படி, இந்த மாடல் 8GB ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 13 மூலம் இயங்கலாம். மேலும் அந்த வெப்சைட்டில் Samsung Galaxy M54 5G ஆனது SM-M546B மாடல் நம்பரில் காணப்படுகிறது. இந்த போனை சோதனை செய்து பார்த்ததில் சிங்கள் கோர் டெஸ்டில் 750 புள்ளிகளும், மல்டி கோர் டெஸ்டில் 2,696 புள்ளிகளும் பெற்றுள்ளது.
மேலும் வரப்போகும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தேடல் அதிகரித்துள்ளது. அதன் மூலம் கிடைத்த தகவல் படி, Samsung Galaxy M54 - 90Hz புதுப்பிப்பு வீதம் கொண்ட 6.67இன்ச் full-HD+ AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கலாம். கேமராவைப் பொறுத்த வரையில் பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா அமையலாம். அதில் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கொண்டு வரலாம். அதே போல் செல்பீ கேமராவைப் பொறுத்த வரையில் 32 மெகாபிக்சல் இருக்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…