Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்திய அரசு டிவிட்டரை மிரட்டியது - முன்னாள் டிவிட்டர் சி.இ.ஓ. தகவல்

Surya Updated:
இந்திய அரசு டிவிட்டரை மிரட்டியது - முன்னாள் டிவிட்டர் சி.இ.ஓ. தகவல்   Representative Image.

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் போது, அரசுக்கு சாதகமாக செயல்படக்கோரி, இந்திய அரசு தங்களை மிரட்டியதாக டிவிட்டர் சமூக வலைதளத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி டார்சி தெரிவித்துள்ளார். பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், விவசாயிகள் போராட்டத்தின் போது, இந்தியாவில் தங்கள் நிறுவனம் மிரட்டலுக்கு உள்ளானதாக கூறியுள்ளார். அரசு தரப்பினர் டிவிட்டர் அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்படும் என தாங்கள் மிரட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் தங்கள் அனுமதியின்றி டிவிட்டரை நடத்திச் செல்ல முடியாது என்றும் அழுத்தங்கள் வந்ததாக அவர் கூறியுள்ளார். அதேபோல் அந்த சமயத்தில்  இந்தியாவில் பத்திரிகையாளர்களும் கூட கடும் அச்சுறுத்தலை சந்தித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். டிவிட்டர் முன்னாள் தலைமைச் செயலதிகாரியின் இந்தப்பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை யாரும் பதிலளிக்கவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்