Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

James Webb Space Telescope Jupiter Pictures: வியாழனின் மெய்மறக்க வைக்கும் அழகு...NASA வெளியிட்ட புகைப்படங்கள்!

Priyanka Hochumin August 23, 2022 & 15:00 [IST]
James Webb Space Telescope Jupiter Pictures: வியாழனின் மெய்மறக்க வைக்கும் அழகு...NASA வெளியிட்ட புகைப்படங்கள்!Representative Image.

James Webb Space Telescope Jupiter Pictures: இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்னும் கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உலகின் முதன்மை ஆராய்ச்சி நிறுவனமான நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (NASA) பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு கண்டுபிடிப்பான ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

இவ்ளோ தூரத்துல கொண்டு போய்யா வச்சிருக்காங்க....

இந்த இயந்திரத்தை உருவாக்க அமெரிக்கா சுமார் 10 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. இதுவே இந்திய மதிப்பில் சொல்ல வேண்டும் என்றால் ஏறத்தாள 79 ஆயிரம் கோடி இந்த James Webb Space Telescope-ஐ உருவாக்க செலவளித்துள்ளது. இப்பொழுது இந்த டெலஸ்கோப் பூமியிலிருந்து 1.6 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் நிலை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அந்த டெலஸ்கோப் புகைப்படங்களை எடுத்து அனுப்புகிறது. அதனை பயன்படுத்தி விஞ்ஞானிகள் தங்களின் ஆராய்ச்சகளை மேற்கொள்கின்றனர்.

என்ன அழகு எத்தனை அழகு!

இருப்பினும் பிரபஞ்சத்தின் இந்த அழகை உலக மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த முறை சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய கிரகமான வியாழன் (Jupiter) கோளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் பரந்த பாறைகள், நெபுலாக்கள், நட்சத்திரங்கள், தூசி ஆகியவற்றைக் கொண்டு வியாழன் கோள் காட்சியளிக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த உடன் பாட புத்தகத்தில் கூறப்பட்டது அனைத்துமே தவறு என்று நிரூபணமாகிவிட்டது. புத்தகத்தில் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில் இருப்பது போல் காட்சியளிக்காமல், வியாழன் கருப்பு நிறத்தில் தோன்றியுள்ளது. காரணம் அப்பொழுது இருந்த டெக்னாலஜி பயன்படுத்தியதிற்கும் இப்பொழுது உருவாக்கிய டெக்னாலஜிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

மேம்படுத்திய வியாழன்...!

வியாழன் கோளின் புகைப்படம் ஜூலை 28 ஆம் தேதி நாசாவிற்கு கிடைத்தது. பிறகு அதனை டிஜிட்டல் முறையில் குறிப்பிட்ட அம்சங்கள் தனித்து நிற்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு அதனை வெளியிட்டுள்ளனர். இதனைப் பற்றி பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான இம்கே டி பேட்டர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வதிவிட்டது என்னவென்றால்,

“உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் இது இவ்ளோ சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வியாழன் கோளை அதன் வளையங்கள், விண்மீன்கள் உடன் படத்தில் காணலாம்” என்று கூறியுள்ளார்.

என்ன சொல்றங்கன்னா....

இந்த புகைப்படத்தைப் பற்றிய NASA-வின் விளக்கம் என்ன என்றால், புதிதாக வெளியிட வியாழனின் புகைப்படம் கடந்த ஜூலை மாதத்தில் எடுக்கப்பட்ட பல படங்களைக் கொண்டு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது என்று கூறியது. ஏனெனில் infrared light என்று சொல்லக்கூடிய மனித கண்களுக்கு புலப்படாத கதிர்களால், இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளதால் செயற்கையாக நிறங்கள் சேர்க்கப்பட்டு இந்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அது என்ன கலர் கலரா இருக்கு!

அந்த புகைப்படத்தில் சிவப்பு நிறங்களுக்கு மேப் செய்யப்பட்ட அரோராக்கள் - பிரகாசிப்பதையும், கீழே உள்ள மேகங்கள் மற்றும் மேலே உள்ள மூடுபனியையும் காட்டுகிறது.

மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் வரையப்பட்ட கோடுகள் வட மற்றும் தெற்கு துருவங்களைச் சுற்றி மூடுபனிகள் சுழல்வதைக் காட்டுகிறது.

மூன்றாவது ப்ளூஸுக்கு வரைபடமாக்கப்பட்ட பில்டர், ஆழமான பிரதான மேகத்திலிருந்து பிரதிபலிக்கும் ஒளியைக் காட்டுவதாக நாசா தெரிவித்துள்ளது.

James Webb Space Telescope Jupiter Pictures, James Webb Space Telescope Jupiter Photos, James Webb Space Telescope Jupiter images, James Webb Space Telescope Jupiter nasa, James Webb Space Telescope reveals incredible Jupiter views, James Webb Space Telescope in tamil, James Webb Space Telescope Jupiter.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்