Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சூரியனில் மர்மமான பகுதியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்...! அவர்களுக்கு காத்திருந்த ஷாக்...!

Priyanka Hochumin September 10, 2022 & 15:45 [IST]
சூரியனில் மர்மமான பகுதியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்...! அவர்களுக்கு காத்திருந்த ஷாக்...!Representative Image.

மனிதர்களாகிய நமக்கு பல விசித்திரமான எண்ணங்கள் மற்றும் கேள்விகள் தோன்றும். இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? ஏன் கிரகங்கள் சூரியனை சுற்றி வருகிறது? இது போன்று நிறைய கேள்விகள் இருக்கிறது. அதற்கான ஒவ்வொரு விடைகளை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகின்றனர். இந்த பதிவில் சூரியனில் கண்டுபிடிக்கப்பட்ட சில மர்மமான பகுதிகளைப் பற்றியும் அதனின் விளக்கங்களை பற்றியும் பார்க்கலாம்.

நமக்குத் தெரிந்த தகவல்

என்னைக்காவது சூரியனுக்கு எவ்ளோ வயது என்று உங்களுக்கு தோன்றியுள்ளதா? கிட்டத்தட்ட 4.603 பில்லியன் ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று தோராயமாக கூறப்படுகிறது. அதே போல் சூரியனுக்கும் நாம் வாழும் பூமிக்கும் சுமார் 150.66 மில்லியன் கிலோமீட்டர் தூரம் இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இதனைப் போன்ற பொதுவான தகவல்கள் நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் இப்பொழுது வெளியான தகவல் ஆராய்ச்சியாளர்களை பெரும் ஆச்சரியதியில் ஆழ்த்தியுள்ளது.

அது என்ன மர்ம பகுதி?

சூரியனைப் பற்றி தெரிந்துகொள்ள உலகின் மிகவும் சக்திவாய்ந்த சூரிய தொலைநோக்கியான டேனியல் கே. இன்யூயே சோலார் டெலஸ்க்கோப் (Daniel K. Inouye Solar Telescope) வழக்கம் போல் சூரியனை கண்காணித்து வந்துள்ளது. அந்த வகையில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி சூரியனின் சில மர்ம பகுதிகளை அந்த சோலார் டெலஸ்க்கோப் கைப்பற்றியது.

அந்த டெலஸ்க்கோப் சூரியனின் மேற்பகுதியான குரோமோஸ்பியருக்கு சற்று மேலே இருக்கும் வளிமண்டலத்தின் அடுக்கை (Layer of Atmosphere) புகைப்படமாக பதிவு செய்துள்ளது. பொதுவாக இந்த Chromosphere பகுதியைத் தான் சூரியனின் மர்மமான பகுதியாக கருதப்படுகிறது. இதனை புகைப்படம் எடுப்பது என்பது அவ்ளோ எளிதான விஷயம் இல்லை.

ஏன் அவ்ளோ கஷ்டம்?

சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற பகுதியான கரோனாவைப் (Corona) போலவே, குரோமோஸ்பியர் ஆனது பொதுவாக நட்சத்திரத்தின் (அதாவது சூரியனின்) ஒளிக்கோளத்தால் (Photosphere) மேகத்தால் சூழப்பட்டு இருக்கும். மேலும் அது சூரியனின் மேற்பகுதிக்கு நிகரானது என்பதால் அதனை புகைப்படம் எடுப்பது என்பது மிகவும் கடினம்.

அப்புறம் எப்படி?

இவ்ளோ கஷ்டம்னா அப்புறம் எப்படி போட்டோ எடுக்க முடிஞ்சது என்று தான நீங்க யோசிக்கிறீங்க. அதற்கான விளக்கம், முழு சூரிய கிரகணம் நடக்கும் போது டேனியல் கே. இன்யூயே சோலார் டெலஸ்க்கோப் அதனை புகைப்படம் எடுத்துள்ளதாம். இன்னும் புரியும் படி கூறவேண்டும் என்றால், ஃபோட்டோஸ்பியரில் (Photosphere) இருந்து வரும் ஒளி சந்திரனால் தடுக்கப்படும் போது, ​​அந்த பகுதி சூரியனின் பிரதான உடலை சுற்றிய ஒரு பிரகாசமான சிவப்பு வளையமாக காட்சியளிக்கப்படும். அந்த சமயத்தில் தான் இந்த மர்ம பகுதி புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

காத்திருந்த அடுத்த ஷாக்!

சுமார் 82,500 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த புகைப்படம் 18 கிலோமீட்டர் ரெசல்யூஷனின் கீழ் யுஎஸ் நேஷனல் சயின்ஸ் பவுன்டேஷன் (US National Science Foundation) வெளியிட்டுள்ளது. அதுல என்ன சொல்ல வராங்கன்னா! சோலார் டெலஸ்க்கோப் புகைப்படம் எடுக்கப்பட்ட பகுதியானது சூரியனின் மேற்பரப்பில் இருந்து 400 கிலோமீட்டர் முதல் 800 கிலோமீட்டர் வரையிலான ஒரு லேயர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்