Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இந்தியாவின் UPI சிஸ்டத்தில் இணைய ஜப்பான் தீவிரம் | Japan Mulls Joining India’s UPI System

Priyanka Hochumin Updated:
இந்தியாவின் UPI சிஸ்டத்தில் இணைய ஜப்பான் தீவிரம் | Japan Mulls Joining India’s UPI SystemRepresentative Image.

வியாழன் அன்று Wion செய்தியிடம் பேசிய ஜப்பானின் டிஜிட்டல் விவகாரங்களுக்கான அமைச்சர் கோனோ டாரோ "இந்திய UPI கட்டண முறைமையில் இணைவது குறித்து நாங்கள் இப்போது தீவிரமாக யோசித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் LiveMint உடன் பேசிய டாரோ, "இந்திய UPI அமைப்பை சரியாக பகுப்பாய்வு செய்ய ஜப்பான் ஒரு குழுவை இந்தியாவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். ஒருவேளை அதற்கு பின்னர் ஜப்பான் டிஜிட்டல் பணம் செலுத்தும் தளத்தை ஏற்றுக்கொண்டால், இரு நாடுகளின் அமைப்புகளின் சாத்தியமான இணைப்பு குறித்து விவாதங்கள் நடத்தப்படும் என்றும் கூறினார்."

வியோனிடம் பேசும்போது, சிங்கப்பூர், தாய்லாந்து அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸால் இணைக்கப்பட்டவுடன், UPI அமைப்பின் வசதியைப் பயன்படுத்தி பல நாடுகளுக்கு இடையே பணம் பரிவர்த்தனையை எளிமை படுத்திக்கொள்ளலாம் என டாரோ பாராட்டினார். எனவே, "இது டெலி-பேமென்ட் கிராஸ் பார்டர் டெலி-பேமென்ட் சிஸ்டத்தின் மற்றொரு தரமாக இருக்கலாம்" என்றும் தெரிவித்தார். இந்தியாவின் டிஜிட்டல் அடையாளத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், இயங்குதன்மைக்கான அடித்தளத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் கிழக்கு ஆசிய நாடு பரஸ்பரம் அங்கீகரிக்கும் விருப்பங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

கடந்த வாரம் நடைபெற்ற G7 டிஜிட்டல் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவும் பங்கேற்றார். குழுவானது cross-border data flow-வை நிரந்தர செயலகமான புதிய சர்வதேச கட்டமைப்பைக் கொண்டுவர முடிவு செய்ததாக கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்