Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை அடுத்து..! ஸ்மார்ட்போன் தாயரிப்பில் களமிறங்கும் எலன் மஸ்க்...?? அப்போ ஆன்ட்ராய்டு, ஆப்பிளின் நிலைமை.?

Editorial Desk Updated:
ட்விட்டர் நிறுவனத்தை  வாங்கியதை அடுத்து..!  ஸ்மார்ட்போன் தாயரிப்பில் களமிறங்கும் எலன் மஸ்க்...?? அப்போ ஆன்ட்ராய்டு, ஆப்பிளின் நிலைமை.? Representative Image.

எலன் மஸ்க் சமீபகாலமாக இந்த பெயர்  தான் எங்குப் பார்த்தாலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இவர் தான்  டெஸ்லா என்ற எலக்ட்ரிக் கார் நிறுவனத்தையும், ஸ்பேஸ் எக்ஸ் என்ற ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயாரிக்கும் நிறுவனத்தையும் உருவாக்கியவர். மேலும்  உலகத்தின் முக்கிய பணக்காரர்களில் ஒருவரும் ஆவர். எலன் மஸ்க்  தனியொரு மனிதன்  நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்று இந்த கால இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குபவர் என்றே கூறலாம். அதற்கு எடுத்துக்காட்டாக இவரது நிறுவனம் தனியாக ராக்கெட்டையே வடிவமைத்து விண்ணிற்கு அனுப்பியுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் நிறுவனத்தை  வாங்கியதை அடுத்து..!  ஸ்மார்ட்போன் தாயரிப்பில் களமிறங்கும் எலன் மஸ்க்...?? அப்போ ஆன்ட்ராய்டு, ஆப்பிளின் நிலைமை.? Representative Image

எலன் மஸ்க்  சில தினங்களுக்கு முன்பு தான் சமூக வலைத்தளங்களில் முக்கியமாகக் கருதப்படும் "ட்விட்டர்" செயலியை 44 பில்லியன் டாலர் கோடிக்கு வாங்கினார். அந்த ட்விட்டர்  செயலியில் உலகம் முழுவதும் உள்ள பல முக்கிய நபர்களும் கணக்கு வைத்து  பயன்படுத்தி வருகிறார்கள், அதில் அனைவரும் தங்கள் கருத்துகளையும் பகிர்ந்து வருகிறார்கள்   என்பது  குறிப்பிடத்தக்கது. எலன் மஸ்கின் எந்த ஒரு செயலிலும் புதுமை இருக்கும் என்றே சொல்லலாம் அதற்கு ஏற்றாற்போல்  ட்விட்டர்  செயலியை வாங்கிய உடனே அதில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தார். இது உலகம் முழுவதும் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய செய்தியாகப் பேசப்பட்டது.

ட்விட்டர் நிறுவனத்தை  வாங்கியதை அடுத்து..!  ஸ்மார்ட்போன் தாயரிப்பில் களமிறங்கும் எலன் மஸ்க்...?? அப்போ ஆன்ட்ராய்டு, ஆப்பிளின் நிலைமை.? Representative Image

இவர் ட்விட்டர் செயலியை வாங்கியது முதல், பல புதிய கட்டுப்பாடுகளையும் புதிய விதிகளையும் புகுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ட்விட்டர் செயலியில் தனக்கு வரும் பதிவுகளுக்குப் பதிலும் அளித்து வருகிறார். அப்படி இந்த முறை எலன் மஸ்கிற்கு  பெண் செய்தியாளர் தனது பதிவில் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார், அதில் பிரபல ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்களான "ஆப்பிள்" மற்றும்  "கூகுள்" தனது ஆப்-ஸ்டோரில் இருந்து ட்விட்டர் செயலியை நீக்கினால் நீங்கள் உங்களுக்கென தனி ஸ்மார்ட் போனையே உருவாக்கிவிடுவீர்கள், விண்ணிற்கே ராக்கெட் அனுப்பும் உங்களுக்கு ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனத்தை உருவாக்குவது கடினமான செயலில்லை என்று நம்புகிறான் என்று கூறியுள்ளார். 

ட்விட்டர் நிறுவனத்தை  வாங்கியதை அடுத்து..!  ஸ்மார்ட்போன் தாயரிப்பில் களமிறங்கும் எலன் மஸ்க்...?? அப்போ ஆன்ட்ராய்டு, ஆப்பிளின் நிலைமை.? Representative Image

அந்த பெண்ணின் பதிவிற்கு "எலன் மஸ்க்" அளித்த பதில் பின்வருமாறு, அப்படி ஒரு நிலை ஏற்படாது என்று நம்புகிறேன் மேலும் அப்படி நடந்தால் நீங்கள் சொன்னதும் கண்டிப்பாக நடக்கும் என்று பதிலளித்தார். சமூகவலைத்தளங்களில் எலன் மஸ்க்கின் இந்த பதிவு அவர் அடுத்ததாக ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்கவுள்ளாரா..? என்ற எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது மேலும் அப்படி நடந்தால் முன்னணி ஸ்மார்ட்  போன் தயாரிக்கும் நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகுளுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.               


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்