Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த அடுப்பு இருந்தால் இனி சிலிண்டர் வாங்க வேண்டியதில்லை.... புதிய அறிமுகம் | LPG Free Stove

Manoj Krishnamoorthi Updated:
இந்த அடுப்பு இருந்தால் இனி சிலிண்டர் வாங்க வேண்டியதில்லை.... புதிய அறிமுகம் | LPG Free StoveRepresentative Image.

நாம் உணவு சமைப்பது என்பது வழக்கமான செயல் தான். நம் நாகரிகம் வளர்வதில் சமைக்கும் முறையும் சமையல் சாதனங்களும் மட்டுமே தான் மாறியுள்ளது. உதாரணத்திற்கு ஆரம்ப காலங்களில் மரக்கட்டையை பயன்படுத்தினோம் இப்போது கேஸ் சிலிண்டர், இண்டக்ஷன் ஸ்டவ் என மாறியுள்ளது. 

இன்று பெரும்பாலும் எல்லோரின் வீட்டிலும் கேஸ் சிலிண்டர் தான் உள்ளது. தொடர்ந்து விலை ஏறும் சிலிண்டர் மக்கள் மத்தியில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதுவே இண்டக்‌ஷன் அடுப்பு பக்கம் போனால் மின்சார கட்டணம் ஒரு பக்கம் உள்ளது. இந்த நிலையில் இருந்து விடுபட இந்த பதிவில் ஒரு வழி உள்ளது. ஆம்... இலவசமாக உணவு சமைக்க ஒரு புதிய அடுப்பை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த அடுப்பு இருந்தால் இனி சிலிண்டர் வாங்க வேண்டியதில்லை.... புதிய அறிமுகம் | LPG Free StoveRepresentative Image

LPG Free Stove

நேரத்தை மிச்சப்படுத்த நம் சமையலறையில் நாம் கொண்டு வந்த கேஸ் சிலிண்டர் இன்று பணத்தை மிச்சப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளுகிறது. இதற்கு மாற்றாக மீண்டும் மரக்கட்டைகளை பயன்படுத்தலாம் என்றால் தற்போதைய சூழல் ஏதுவாக அமையவில்லை.  இந்த நிலைக்கு ஒரு புதிய தொழில்நுட்பம் கைகொடுக்கும் என்று நம்பலாம். 

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)அறிமுகப்படுத்திய சோலார் அடுப்பு இந்த பிரச்சனை சரியான தீர்வாக இருக்கும். இந்த புதிய சோலார் அடுப்பு பழைய மாடல்கள் போல் அல்லாமல் செயல்படும்.  இதில் இருக்கும் 2 யூனிட் ஒன்று கிச்சனிலும் மற்றொன்று வெளியில் வெயிலில் பொருத்தப்படும்.  பகலில் கிடைக்கும் சூரிய சக்தியை சேமிப்பதால் இரவிலும் தைரியமாக பயன்படுத்தலாம். 

இதற்காக நாம் பெரியதாக மெனக்கெடத் தேவையில்லை, ஒருமுறை 12,000 ரூபாய் செலவு செய்தால் வாழ்நாள் முழுவதும் இலவசமாக சமைக்க முடியும். இதை உபயோகப்படுத்துவது எளிது என்பதால் சாதாரண அடுப்பு போல அனைவரும் எந்த தயக்கமும் இல்லாமல் பயன்படுத்தலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்