Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Mobile Fast Charging Issues: ஃபாஸ்ட் சார்ஜிங் மொபைல் பயன்படுத்துறீங்களா..? அப்ப இத கண்டிப்பா நீங்க தெரிஞ்சிக்கணும்

Gowthami Subramani May 19, 2022 & 15:05 [IST]
Mobile Fast Charging Issues: ஃபாஸ்ட் சார்ஜிங் மொபைல் பயன்படுத்துறீங்களா..? அப்ப இத கண்டிப்பா நீங்க தெரிஞ்சிக்கணும்Representative Image.

Mobile Fast Charging Issues: தற்போது வளர்ந்து வரும் டெக்னாலஜியில் ஒன்றாக, ஸ்மார்ட்போன்களுக்குச் செய்யப்படும் ஃபாஸ்ட் சார்ஜிங் மிகவும் பிரபலமான ஒன்றாக அமைகிறது.

தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் வேலையில், தயாரிப்புத் துறைகளும் அதிகமாகவே வளருகின்றன. அவற்றுள், ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு புது புது அம்சங்களை வெளியிட்டு பயனர்களை ஈர்க்கின்றனர். அந்த வகையில், தற்போது பிரபலமாகி வருவது தான் மொபைலுக்குப் போடப்படும் ஃபாஸ்ட் சார்ஜிங் முறை.

முதலில், நாம் பயன்படுத்தும் மொபைல்களின் பேட்டரி திறன் 5W என்ற அளவில் இருந்தது. ஆனால், தற்போது மிக அதிவேக நிலையில் வளர்ந்து, 10W, 25W, 33W, மற்றும் 65W எனப் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. மொபைல் போன்களில் இருக்கக் கூடிய இந்த அம்சத்தால், பயனர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் (Mobile Fast Charging Issues).

ஃபாஸ்ட் சார்ஜிங்

மொபைல் போன்களின் ஒரு அம்சமாக விளங்கக் கூடியது தான் ஃபாஸ்ட் சார்ஜிங். முன்பு எல்லாம், மொபைலுக்குச் சார்ஜ் போடுவதற்கு மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால், இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம், மிக விரைவிலேயே, நமது மொபைல் போன்களுக்கு சார்ஜ் செய்யப்படுகிறது.

சார்ஜிங் சர்க்யூட் தான், இந்த ஃபாஸ்ட் சார்ஜிங்கை கையாள்கிறது. இதனால், பாஸ்ட் சார்ஜரை அனுமதிக்கும் ஸ்மார்ட் போன்களில் மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும்.

அதிவேக சார்ஜ் செய்வதாகக் கருதுவது

வேகமான சார்ஜிங் செய்யப்படுவது என்பது, மின்னணு தயாரிப்புகளில் ஒரு பயனுள்ள அம்சமாகக் கருதப்படுகிறது. இருந்த போதிலும், சில சமயங்களில் இது ஒரு சில விளைவுகளைத் தரக் கூடியதாக அமைகிறது. முதலில் பயன்படுத்தும் போது வேகமாக சார்ஜிங் செய்யும் என நினைத்துக் கொண்டிருக்க, சிறிது நாள்கள் கழித்த பின், இது போல இருக்காது. மெதுவாக சார்ஜ் ஏறுவது போல நாம் உணரலாம் (Mobile Fast Charging Problems).

பெரும்பாலும், ஸ்மார்ட்போன் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் 10வாட்களுக்கு மேல் உள்ள டிவைஸ்களை வேகமாக சார்ஜ் செய்யும் எனக் கூறுவர். எனினும், தொழில்துறை தர நிலையில், இதுவரை வேகமான சார்ஜிங் இல்லை.

ஆபத்தா? நல்லதா?

ஃபாஸ்ட் சார்ஜிங்கை உபயோகப்படுத்துவது, நல்லதா? கெட்டதா? என்பது எல்லோரையும் சிந்திக்க வைத்த ஒன்று. ஒரு மொபைலில் விரைவான பேட்டரியைப் பயன்படுத்தி, சார்ஜ் செய்யும் போது, அது சூடாவதை உணரலாம். பெரும்பாலான, ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள், லித்தியம்-ஐயன் பேட்டரியைத் தான் பயன்படுத்துவர். இதனால், எந்த நிலையிலும், போன் அதிகமாக சூடாகும் எனத் தெரிகிறது. இதனால், பேட்டரியின் தரம் குறைந்து போவதாகக் கூறப்படுகிறது (Problems in Fast Charging).

ஃபாஸ்ட் சார்ஜிங் செய்யும் போது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று, மொபைல் இரட்டை செல் பேட்டரி மூலம் சார்ஜ் ஆகும். அதாவது 5000mAh பேட்டரி என்றால், 2,500 + 2,500 என்ற வீதத்தில் செயல்படும். இவ்வாறு இரட்டை பேட்டரியுடன் இயங்கும் மொபைல் விரைவாக செயலிழக்காது எனக் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்