Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

NASA James Webb Telescope Images: நாசாவின் James Webb Telescope...கண்களில் ஜொலிக்கும் பிரபஞ்சத்தின் அழகு! வெளிவந்த ரகசியங்கள்...

Priyanka Hochumin July 13, 2022 & 13:55 [IST]
NASA James Webb Telescope Images: நாசாவின் James Webb Telescope...கண்களில் ஜொலிக்கும் பிரபஞ்சத்தின் அழகு! வெளிவந்த ரகசியங்கள்...  Representative Image.

NASA James Webb Telescope Images: அசாதாரண சிந்தனைகளுடன் கண்டுபிடுப்புகளை வெளியிடும் நாசா, நேற்று வெப் தொலைநோக்கியின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

SMACS 0723 என்ற கேலக்ஸி கிளஸ்டரின் புகைப்படும் தான் அது. இவ்வளவு துல்லியமான முழு வண்ண புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் நாசா நிர்வாகி பில் நெல்சன் ஆகியோர் வாசிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகையில் வெளியிட்டுள்ளனர். இந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கிட்டத்தட்ட 13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடைபெறும் நிகழ்வை தெளிவாக துல்லியமாக காட்சிப்படுத்தியுள்ளது. பிரபஞ்சத்தை ஆராய்ச்சி செய்ய தொடங்கிய நாள் முதல் இதுவரை எடுக்கப்பட்டுள்ள பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் துல்லியமான அகச்சிவப்பு புகைப்படங்களில் மிக சிறந்தது இதுவே ஆகும்.

 

 

SMACS 0723 கேலக்ஸி கிளஸ்டர்

மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பிரத்தியேகமான அம்சங்களை கொண்டுள்ளது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. எனவே, இதில் இருக்கும் Webb's Near-Infrared Camera (NIRCam) மூலம் தான் இந்த புகைப்படும் எடுக்கப்பட்டதாக நாசா கூறியுள்ளது. இந்த விண்வெளி தொலைநோக்கி பொம்மியில் இருந்து சுமார் 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிறுவப்பட்டுள்ளது. அங்கிருந்து எடுக்க புகைப்படங்கள் தான் இவைகள். மேலும் பிரபஞ்சத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் கண்டறிய முடிந்தது.

தங்கம் கொண்ட தொலைநோக்கி

தங்க கண்ணாடியைக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. இது 21.32 ஆதி அகலம் ஆகும். பெரில்லியதால் உருவாக்கப்பட்ட 18 அறுகோண துண்டுகளை ஒன்றாக இணைத்து இட்னஹ் கண்ணாடிகள் உருவாக்கப்பட்டது. அந்த ஒவ்வொரு துண்டிலும் 48.2 கிராம் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இதன் மூலமே பிரதிபலிப்பானாக இந்த தொலைநோக்கி செயல்படுகிறது. மேலும் உலகம் எப்படி தோன்றியது என்றும் இதன் மூலம் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

NASA James Webb Telescope Images, NASA James Webb Telescope Images first image, NASA James Webb Telescope Images July 12, NASA James Webb Telescope live, NASA James Webb Telescope twitter, NASA James Webb Telescope new Images, NASA James Webb Telescope picture, NASA James Webb Telescope Images download, NASA James Webb Telescope Images 4k,


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்