Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

NASA Perseverance Rover Latest News: ஃபஸ்ட் கதவு...அடுத்து பாம்பு...இப்ப நூடுல்ஸ்! அடுத்து என்னென்னு தெரியல?

Priyanka Hochumin July 25, 2022 & 17:00 [IST]
NASA Perseverance Rover Latest News: ஃபஸ்ட் கதவு...அடுத்து பாம்பு...இப்ப நூடுல்ஸ்! அடுத்து என்னென்னு தெரியல?Representative Image.

NASA Perseverance Rover Latest News: செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் நாசா சமீபத்தில் ஒரு வினோதமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் இருக்கும் மர்மங்கள் என்ன என்று தெரிந்துகொள்வோம் வாங்கள்.

அதாவது சூரிய குடும்பத்தில் பூமியில் மட்டும் தான் உயிர் வாழும் தகுதியுடைய அமிலங்கள் இருக்கிறது. இருந்தாலும் மனிதனின் ஆறாம் அறிவின் தேடலால் பல நம்ப முடியாத விஷயங்கள் நமது பார்வைக்கு வருகிறது. அதனின் ஒரு அங்கமாய் அமெரிக்காவின் இருப்பிடமாகக் கொண்ட நாசா நிறுவனம் மார்ஸ் அதாவது செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறதா என்று 1976 ஆம் ஆண்டு முதல் முயற்சி செய்து வருகிறது. அதனுள் சில வெற்றிகளையும் கண்டு வருகிறது.

நாசா அனுப்பிய ரோவர்

செவ்வாய் கிரகத்தில் உலா வருவதற்காக பெர்சவரன்ஸ் ரோவர் என்னும் தொழிநுட்பத்தை நாசா அனுப்பியது. அதுவும் செவ்வாய் மார்ஸின் சுற்றுப்புறம், நிலப்பரப்பு என்று மொத்தமாக ஆய்வு செய்து பல்வேறு புகைப்படத்தை பூமிக்கு அனுப்பி வருகிறது. அதனுள் இரண்டு பாறைக்கு நடுவில் வெள்ளை நிறத்தில் பளபளப்பான பொருள் ஒன்று தென்பட்டுள்ளது. அது என்ன என்று தெரியவில்லை, ஆனால் நூடுல்ஸ் வடிவில் ஒரு புகைப்படத்தை அனுப்பியது.

பெர்சவரன்ஸ் ரோவர்

இந்த ரோவரின் முன்பக்கத்தில் அபாயத் தடுப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. அதனைக் கொண்டு எந்த வித அசம்பாவிதமும் இன்றி ரோவர் பாதுகாப்பாக நகர்த்தப்படுத்தவதாக நாசா தெரிவித்துள்ளது. அந்த ரோவர் கேமரா நூடுல் போன்ற வடிவத்தை கொண்ட ஒரு பொருளை படம் பிடித்துள்ளது. அந்த பொருளின் தன்மையை விஞ்ஞானிகளால் சரியாக கண்டறிய முடியவில்லை.

என்னது குப்பையா?

இருப்பினும் இது ஒரு உண்ணும் பொருள் கிடையாது என்று நாசா தீர்மானமாக கூறியது. அப்படி என்றால் இதுவரை கிடைத்து போல் இதுவும் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் குப்பைத் துண்டுகளாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். ஏனென்றால், செவ்வாய் கிரகத்தை பொறுத்தவரை குப்பை பெரும் சிக்கலாக இருக்கிறது. இல்லை ஒருவேளை நாசா செவ்வாய் கிரகம் செல்லும் பொழுது ஏற்பட்ட குப்பையாக கூட இருக்கலாம். இது குறித்து ஆராய்ச்சி செய்வதாகவும், பின்பு தகவலை வெளியிடுவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

அமானுஷ்யங்கள் நிறைந்த மார்ஸ்

இதற்கு முன்பு ஒரு அமானுஷ்ய கதவு வடிவத்தில் மற்றும் பாறைகளுக்கு நடுவில் இரண்டு பாம்புகள் தலை இருப்பது போன்ற புகைப்படத்தை நாசா அனுப்பிய ரோவர் பூமிக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறது. இது குறித்து ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இவை அனைத்தும் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ முடியுமா? என்னும் கேள்விக்கான விடையை அளிக்கும் என்று நம்புகிறோம். 

 

 

NASA Perseverance Rover Latest News, perseverance rover update 2022, mars latest news 2022, NASA Perseverance Rover landing, NASA Perseverance Rover images, NASA Perseverance Rover update, NASA Perseverance Rover news, NASA Perseverance Rover mission, NASA Perseverance Rover cost, nasa perseverance photos, nasa mars mission,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்